பெண்ணின் பார்வையை பறித்த மொபைல் போன்
இருட்டில் அதிக நேரம், ஸ்மார்ட் போனை பயன்படுத்திய, சீன பெண்ணின், ஒரு கண் பார்வை பறிப்போனது. சீனாவின், சிஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியு. இவர், தினமும், இரவில், மொபைல் போனை, இரண்டு முதல் மூன்று மணி நேரம், பயன்படுத்தினார். ஒரு வாரமாக, லியுவின், வலது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருட்டில் நீண்ட நேரம், மொபைல் போனின், பிரகாசமான வெளிச்சத்தை பார்த்துகொண்டு இருந்ததால், இந்த பெண்ணின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment