இரத்தத் தட்டுப்பாட்டை நீக்க களத்தில் குதித்த காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா
(முஹம்மது நியாஸ்)
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் நிலவி வருகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பினரால் 10வது தடவையாக இன்று (09. 03. 2014) மனித நேயம் பேணும் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விரத்ததான முகாமில் காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலாருமாக சுமார் 160பேர் வரையில் தங்களின் உதிரத்தை நன்கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமது லெப்பை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் KMM. கலீல் (பிலால்) மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், உலமாக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பானது, இஸ்லாமிய மார்க்கத்தை அல் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மாத்திரம் நின்று முஸ்லிம்கள் மத்தியிலும் பிற சமூகத்தவர்களுக்கும் பிரச்சாரம் செய்து வருவதோடு மாத்திரமல்லாது, மனிதநேயத்தை வலியுறுத்துகின்ற இரத்தான முகாம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், மையவாடிகள் சுத்திகரிப்பு, சிரமதானம் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளில் பாதிக்கப்பட மக்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்குதல் போன்ற இன்னபிற சமூக சேவைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment