மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க சில ஆண்டுகள் பிடிக்கலாம் - அமெரிக்கா தெரிவிப்பு
(Nf) இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய பயணிகள் விமானத்தைக் கண்டுபிடிக்க சில வருடங்கள் ஆகலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டறியும் ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
எனினும் கறுப்புப் பெட்டியின் மின்கலம் செயலிழப்பதற்கு முன்னர் அதை கண்டுபிடித்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கறுப்புப் பெட்டியானது விபத்து நிகழ்ந்த 30 நாட்கள் வரை செயலில் இருக்கும். மலேசிய விமானம் காணாமல் போய் 3 வாரங்களுக்கு மேலாகிய நிலையில் இதுவரை கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானம் தேடப்படும் இடத்தில் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பத்து விமானங்களும், எட்டு கப்பல்களும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேடலில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் ஒன்றான அவுஸ்திரேலியக் கப்பலில் காணாமல்போன விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கான ரேடார் ஒன்றும் இருக்கிறது.
கடல் மட்டத்துக்கு கீழே ஆறு கிலோமீட்டர்கள் ஆழத்திலிருந்து சமிக்ஞை வந்தாலும்கூட கப்பலில் உள்ள இந்த ரேடார் அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காணாமல்போன மலேசிய விமானத்தில் பயணித்த சீன பிரஜைகளின் உறவினர்கள் சுமார் முப்பது பேர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, விமானம் சம்பந்தமான விடைகள் வெளிவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
விமானத்திற்கு என்ன ஆனது? என்ற உண்மை தெரிய வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் தொலைந்துவிட்டது என்று கூறியமைக்காகவும், தகவல்களை வெளியிடுவதில் தாமதம் நிலவியமைக்கும் மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுவும் அமெரிக்காவின் நாடகமாக இருக்கலாம்,இந்திய சமுத்திரத்தில் அமெரிக்க வான்படை முகாம் உள்ள சிறு தீவொன்றிலேயே இந்த விமாணம் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும்,உலகமெங்கும் தேடிய உலகம்,இந்த தீவைப்பற்றி மட்டும் கதைக்கவுமில்லை,தேடவுமில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என இந்திய வல்லுனர்களின் கருத்து என்பதை நானும் இங்கு பகிருகிறேன்.
ReplyDeleteஇன்னுமும்,அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதலை செய்தது முஸ்லிம் இயக்கம் என(தாலிபான்/அல்கொய்தா) என நம் முஸ்லிம்களும் நம்புகின்றனர்.ஆனால்,அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே இது ஒரு அமெரிக்காவின் திட்டமிட்ட னாடகம் என்பதை நுனுக்க கலையை பயன்படுத்தி நிருபித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை நடத்தவே இந்த நாடகத்தை அரங்கேற்றி,போரை ஆரம்பித்தது.இதுபோல்,எங்கேயும் தாக்குதலை நடத்த,முன்கூட்டியே ஒரு ஏற்பாடாகவும் இருக்கலாம்.
nothing else, their plan is to stay in the middle of Indian Ocean. US was forced Srilnaka to provide the Trincomale Harbour to build a strong US base which can control and monitor whole Indian Ocean and Asian countries. but India and China warn Srilanka. so the plan is not executed in trinco harbor. this is the world's natural and strong harbor. the depth is still unknown. this is very suitable to handle the largest submarines. also the Indian ocean is with largest area of international sea.
ReplyDeleteMH 370 is may be a US plan to move some technical and monitoring equipment and ships to Indian Ocean through Malaka straight across Indian sea limit to Middle of the Indian Ocean.
சாஜஹான், மஜீத்,
ReplyDeleteஉங்கள் கருத்துகளைப் பார்க்கும்போது அண்மையில் வாசித்த சிறுகதையொன்றில் படித்த ஒரு ஜோக் ஞாபகம் வருகின்றது.
ஒரு பிரிட்டிஷ்காரனோ அல்லது ஆபிரிக்கனோ கார் ஓட்டிக்கொண்டு போகும்போது அந்தக் கார் திடீரென நின்று போய்விட்டால் உடனே இறங்கி வந்து காரின் எஞ்சினைப் பரிசோதிப்பானாம். ஆனால் அதுவே ஒரு பாகிஸ்தான்காரனாகவோ அரபியாகவோ இருந்தால் உடனே காரை விட்டிறங்கி, "இது அமெரிக்காவின் சதி!" என்று கோஷம் போடுவானாம். அதற்குப் பிறகுதான் பெற்றோல் தாங்கியையோ எஞ்சினையோ திறந்து பார்ப்பானாம்.
சந்தேகம் வரத்தான் வேண்டும். ஆனால் அதுவே ஒரு வியாதியாகிவிடக்கூடாது!