மேல் மாகாணத்தில் சிங்கள பௌத்த முதலமைச்சரை நியமிக்கும் திட்டமா..?
எவர் எதனை கூறினாலும் ஜனாதிபதி தன் மீதே விருப்பம் கொண்டுள்ளதாகவும் இதனால் அடுத்த மேல் மாகாண முதலமைச்சர் தானே என மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உபாலி கொடிக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தூரநோக்கம் கருதி சிந்தித்து செயற்படக் கூடியவர். கம்மன்பிலவை முதன்மை வேட்பாளராக நியமித்தது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை புறந்தள்ளிவிட அல்ல. அது அவரது தந்திரம்.
உதய கம்மன்பில கடிதம் எழுதவும், ஒலிப்பெருக்கிகளை பொருத்தவும், பொலிஸ் அனுமதியை பெறவும் பயன்படுத்தப்படும் அலுவலக உதவியாளரை போன்றவர்.
வடக்கு மாகாண முதலமைச்சரை எதிர்கொள்ள மேல் மாகாணத்தில் சிங்கள பௌத்த முதலமைச்சர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்று கூறுவதால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
சகல இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முதலமைச்சர் ஒருவரே மேல் மாகாணத்திற்கு தேவை. சிங்கள பௌத்த முதலமைச்சர் தேவை எனில் அவர்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்றார்.
Post a Comment