கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம் (படங்கள்)
(Vi) சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தெற்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரத்தை சேர்ந்தவர் ஷாவோ, டியூவான் என்ற தம்பதி.
நிறைமாத கர்ப்பணியான டியூவானிற்கு மருத்துவ பரிசோதனைக்காக தன் கணவருடன் மோட்டார் வண்டியில் சென்றுள்ளார். இதன்போது இவர்களின் வண்டியின் மீது எதிர்பாராத விதமாக லொறி ஒன்று பயங்கரமாக மோதியதால் இருவரும் மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
லொறி மோதிய வேகத்தில் டியூவானின் வயிற்றிலிருந்து நழுவிய குழந்தை சுமார் 3 மீற்றர் தூரத்தில் விழுந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள் உடனடியாக எம்பியுலன் வண்டியை அழைத்து குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தலை மற்றும் முதுகில் பலத்த காயத்துடன் உயிர்தப்பிய அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தை நலனை கருத்தில் கொண்டு அதை காண வரும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர்.
Post a Comment