Header Ads



இலங்கைக்கு எதிராக ஆதரவு கோரும் பிரித்தானிய பிரதமர்


இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் பிரேரணைக்கு ஆதரவு தருமாறு, தென்கொரியா, கசகஸ்தான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தாம் வலியுறுத்தி இருப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.

ஹேக்கில் வைத்து அந்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது, தாம் இதனைத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை உள்ளக விசாரணை ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டிய செயற்பாடுகள் முழுமை பெறாத நிலையிலேயே சர்வதேச விசாரணை குறித்த பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.