Header Ads



அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் ஒவ்வொரும் வாக்கும் பள்ளிவாசல்கள் மீது எறியப்படும் கற்களுக்கு சமனாகும் - பைரூஸ் ஹாஜி

முஸ்லிம்கள் மீது இன வெறித்தனத்தை காட்டி வரும் அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் ஒவ்வொரும் வாக்கும் பள்ளிவாசல்கள் மீது எறியப்படும் கற்களுக்கு சமனாகும் என முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் தெரிவித்தார்.

புதுக்கடை ஹாபர் தோட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்த அரசாங்கம் முஸ்லிம்களை பல வகையிலும் கொடுமைப்படுத்துகின்றது. வெறுமனே அவர்களின் சொந்த அரசியல் இலாபத்துக்காவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

நாட்டில் இன்று முஸ்லிம்களால் நிம்தியாக வாழ முடியாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்று பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அண்மைக்காலமாக பாரிய அளவில் அதிகரித்து விட்டது. வெறுமனே இரண்டு ஆண்டுகளுக்குள் 30 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள.

பள்ளிவாசல்களை தாக்குபவர்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது மேல்மாகாண சபை தேர்தல் இடம்பெறவிருக்கிறது. இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் பள்ளி வாசல்கள் மீது எறியப்படும் ஒவ்வொரு கற்களுக்கும் ஒப்பானதாகும். 

கிராண்ட்பாஸ் மோலவத்தை பள்ளிவாசல் தாக்கப்படும் போது அரசு மௌனமாகவே இருந்தது. பிரச்சினை மிகவும் மோசமான நிலைமையை ஏற்படுத்தியது. இதன்போது அமைச்சர் பௌசியும் ரிஷாதும் பள்ளிவாசலுக்காக 6 பேச்சஸ் காணி தருவதாக கூறினார்கள். ஆனால் 6 அடி நிலம் கூட பள்ளிவாசலுக்காக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 
இந்நிலையில் அரசாங்கத்திக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களை கேட்பது வெட்கமாகும். 

கொழும்பில் மட்டும் எறத்தாள 10 பள்ளிவாசல் தாக்குதல்களும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியூடாக நாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தமையினாலேயே ஏற்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இன்று முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே ஹக்கீமும் ரிஷாதும் கொழும்பில் தனித்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சந்திக்கு சந்தி முஸ்லிம் கங்கிரஸாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாலும் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களால் எமது பிரதிநிதித்துவமே இழக்கப்பட போகின்றது. இதனை மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த தேர்தலில் அதிகமான விருப்பு வாக்குகளால் வெற்றிபெறும் போது அடுத்த பாராளு மன்றத்தில் இந்த பிரதேசத்திலுள்ள ஒருவரை நீங்கள் பிரதிநிதியாக பெறலாம். அதன் தேவையை நீங்கள் நன்கு அறிவீர்கள் எனவே ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு வாக்களித்து எனது இலக்கமான 31 இற்கும் முஜிபுர் ரஹ்மானின் இலக்கமான 30 இற்கும் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

1 comment:

  1. இப்போது 'எல்லோரும்' கண்விழிக்கிறார்கள்......! 'சூரிய நமஸ்காரம்' எப்போதோ செய்திருக்க வேண்டும். 'தேர்தல்' வரும் போது மட்டுமட்டுமல்ல......?

    ReplyDelete

Powered by Blogger.