Header Ads



'கேப்டன் பதவி வேண்டாமய்யா' - தோனி

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி பெரும் கலக்கத்தை சந்தித்து வருகிறது , இதன் அடுத்தக்கட்ட காட்சியாக சென்னை அணியின் கேப்டன் தோனி தன்னை விடுவிக்குமாறு இந்த அணியின் நிர்வாகிகளில் ஒருவரான சீனிவாசனிடம் கோரியுள்ளார். இதனையடுத்து இந்த அணியில் இருந்து அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இதன் 5 துணைத்தலைவர்களில் ஒருவர் இடைக்கால தலைவராக செயல்படுவார் என்றும் , குறிப்பாக ஐ.பி.எல்., விவகாரங்களை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கவாஸ்கர் கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பெரும் சூதாட்டம் நடந்தது. சில விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மும்பை போலீசார் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத்சந்திலா, அங்கீத்சவான் ஆகிய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ்குந்த்ரா, சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் தோனியை மையமாக வைத்து ஒரு புயல் புறப்பட துவங்கியது. சால்வே என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் . இந்த மனுவில் தோனிக்கு தெரிந்து சில விஷயங்கள் நடந்திருக்கிறது. தோனி மேட்ச்பிக்ஸிங் குறித்து விசாரணைக் கமிட்டியிடம் தவறான தகவலை கொடுத்துள்ளார். குருநாதன் மெய்யப்பனை காப்பாற்றும் வகையில் செயல்படுகிறார். இதனால் இவரும் ஒரு குற்றவாளியே என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி ஐ.பி.எல்., தொடரில் வெளியேற்ற நீதிபதிகள் முடிவு செய்தவனர். ஆனால் விளையாட்டு ரசிகர்களின் ஆவலை கருத்தில் கொண்டு சஸ்பெண்ட் செய்யவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து தோனி சென்னை அணியில் இருந்து விலகிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

போனில் தோனி பேச்சு : இது தொடர்பாக டாக்காவில் இருக்கும் தோனி, சீனிவாசனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுவது பெரும் கவலை அளிக்கிறது. இதனால் நான் பெரிதும் மனதளவில் பாதிக்கப்ட்டு வருகிறேன். எனவே சென்னை அணி கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று கூறினாராம். இந்தியா கிமென்ட்ஸ்சிலும் தமக்கு எவ்வித பொறுப்பும் வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். இது குறித்து சீனிவாசன் முடிவை விரைவில் தெரிவிப்பதாக கூறினாராம். இதனால் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.