Header Ads



மலையகப் பிரதேசங்களில் நீர் பற்றாக்குறை

(JM.Hafeez)

மலையகப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நீர் பற்றாக்குறையை எதிர் கொள்ளும் அபாய் ஏற்பட்டு வருவதாக நீர் நினியோக வடிகால் அமைப்பு சபை எச்சரிக்கிறது.மகாவலி கங்கை மிகப் பரிதாபகரமான நிலையில் காணப்படுகிறது.

நாட்டின் பொதுவாக எல்லா நீர் மின் உற்பத்தி நிலையங்களும் மகாவலி கங்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளன. அதே நேரம் கண்டி மாவட்டத்தில் அனேக நீர் வினியோகத்திட்டங்களுக்கு மகாவலி கங்கையின் மூலமே நீர் பெறப் படுகின்றன.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலமே வடமத்திய மாகாண விவசாயக் காணிகளுக்கு அதிகளவு பாசன வசதிகள் கிடைக்கின்றன.

எனவே மகாவலி கங்கையின் நீர் மட்டம் எனைய காரணிகளில் பாதிபபுச் செலுத்தி வருகின்றன. மகாவலி கங்கையின் நீர் மட்டம் மிக மிகக் குறைந்து ஒரு சிற்றாரு போல் ஓடுகிறது. போல்கொல்லையை அண்டிய பிரதேசஙகளில் பாரிய ஏரிபோல் காட்சியளிக்கும் இடங்கள் தற்போது நீர் வழிந்தோடும் நீரோடை ஒன்று போல் சில இடங்களில் காட்சி அளிக்கின்றன.
எனவே குடிநீர் பிரச்சினை கூட ஏற்படும் அபாயம நிலவுவதுடன்  குழாய் நீர் வினியோகத்தில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட் இடமுண்டு. பொது மக்கள நீரை சிக்கனமாகப் பாவிப்பதன் மூலம்  மாரி காலம் தொடங்கும் வரை இழப்புக்களை ஓரளவிற்குக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் நீர் வகொல் அமைப்பு சபை எச்சரிக்கிறது.




No comments

Powered by Blogger.