இந்த அரசாங்கம் உக்கிப்போன மரம் - ரணில் விக்ரமசிங்க
வாழ்க்கை செலவை குறைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் என்னும் உக்கிப்போன மரத்திற்கு பதிலான எதிர் கட்சி என்னும் மரம் நடுவதற்கான காலம் தோன்றியுள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டார்.
மக்களுக்கு இந்த அரசாங்கம் வேண்டாம் என்று போய்விட்டது. அப்படியானால் அரசாங்கத்தை நீக்க வேண்டும். அதன் முதல் கட்டமே நாங்கள் இப்போது முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கு ஆதரவு அளிக்காமையினால் மரத்திற்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. அந்த மரத்தை இல்லாமல் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி என்ற புதிய மரத்தை நாட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆழும் கட்சியில் உறுப்பினராக இருந்து குளிர் காயும் எமது எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு .... ??????
ReplyDelete