Header Ads



முஸ்லிம்கள் இயக்க ரீதியான பிளவுகளை தவிர்த்து, கலிமாவின் கீழ் ஒன்றுபட வேண்டும் - பசீர் சேகுதாவூத்


(எம்.எம்.எம். ரம்ஸீன்)

இந்நாட்டு முஸ்லிம் சமூகம் இயக்க ரீதியான பிளவுகளைத் தவிர்த்து கலிமாவின் கீழ்  ஒன்றுபடுவது பற்றி சிந்திக்க வேண்டும். நாம் யாவரும் ஒரே கலிமாவை மொழிந்து அதன்படி செயலாற்றுபவர்கள். எனவே நாம் இக்கலிமாவின் கீழ் ஒன்றுபட முடியும். 

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பசீர்சேகுதாவூத் குறிப்பிட்டார்.  கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் அலுவலக கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் (09.03.2014 ஞாயிற்றுக்கிழமை) பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  

இலங்கை முஸ்லிம்கள் தம்மை புதிய அடையாளப்படுத்தலுக்குட்படுத்த முயற்சித்ததன் விளைவு பேரினவாதிகள் மத்தியில் தப்பபிப்பிராயத்தை தோற்றுவித்துள்ளன. இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லாமல் இல்லை. நாம் புதிதாக ஆனால் எம்மை நாம் அடையாளப்படுத்தப்படும் விதம் மற்வர்கள் மத்தியில் வெறுப்புணர்வையூட்டியுள்ளன. இவர்களின் பொறாமையின் வடிவம்  எமக்கெதிரான கோசங்கள் எழுப்பப்படக் காரணமாகியுள்ளது. 

முஸ்லிம்கள் மத்தியில் இயக்க ரீதியான பிரச்சினைகள் தலைதூக்கும் நிலையில் கலிமாவின் கீழ் ஒன்றுபடாமலிருக்க முடியாது.  இயக்க ரீpதியிலான பிளவுகளைத் தவிர்து கலிமா அடிப்படையில் ஒன்றுபடுவது பற்றி சிந்திக்க வேண்டும். இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் மேலும் பிளவுபடுமேயானால் எமது அடையாளங்கள்  ஒழிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். 

எனவே நாம் ஒன்றுபட்டு எமது உரிமைகளை அரசாங்கதுடன் இருந்து கொண்ட தீர்வு காண முடியும். மதங்கள் அரசியல் அல்ல. ஆனால் அரசியலுக்காக மதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.   இஸ்லாம் தனிப்பட்ட ஒரு இனத்திற்கான வழிகாட்டியன்றி  முழு பிரபஞ்சத்திற்குமான  வழிகாட்டியாகும்.  இவ்வழிகாட்டலை எவருக்கும்  பின்பற்ற முடியும். சமகாலத்தில் சிலர் வர்த்தக நோக்கங்களுக்காகவும் காழ்ப்புணர்ச்சியாலும் இஸ்லாத்தை  பயங்கரவாதமாக காட்;ட முயற்சிக்கின்றனர் என்றார். 

இதில் மௌலானா மௌலவி ஆசிக் தங்கள் அவர்களும் கலந்து கொண்டு துஆ பிரார்த்தனை புரிந்தார். 

3 comments:

  1. but, Alla thareeqakalum, iyakkangalum onru paduwazillai anra kolhayyil onru pattullarhaley. Allarayyum onru paduththa orey wali rasoolullah sheyzazai mathiram sheywazu anra mudiwey aduppazu.

    ReplyDelete
  2. Allah is great. He is well aware of mind of every people. if Hon Basheer has talked the above statement for the sake of allah. it is Ok. Allas peace be upon him. if he has talked the above statement for the pity political advantage, he has to answer to the Allah.

    ReplyDelete

Powered by Blogger.