Header Ads



"கூகுள்' உருவாக்கும் செயற்கை அறிவுத்திறன்


"அடுத்த 15 ஆண்டுகளில், கம்ப்யூட்டர்களும், ரோபோக்களும், அறிவுத் திறனில், மனிதர்களை விட அதிகமான திறனை பெற்று இருக்கும்' என்று செயற்கை அறிவுத்திறன் முன்னோடியான, கூகுள் நிறுவன இயக்குனர் கூறியுள்ளார். 

தட்டையான ஸ்கேனர்கள், தட்டச்சு முகத்தை அறியும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள், உரையை பேச்சு வடிவில் மாற்றும் சின்தசைசர்கள் போன்ற வற்றை, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு இயக்குனரான, ரே குர்ஸ்வெய்ல், 66, உருவாக்கிஉள்ளார். கடந்த 1990ம் ஆண்டு, இவர் வடிவமைத்த கம்ப்யூட்டர், 1998ல் நடந்த சதுரங்க போட்டியில், அப்போதைய உலக சதுரங்க சாம்பியனை 
வீழ்த்தியது. எதிர்கால இணையதள தேவையை முன்கூட்டியே கூறியுள்ள, குர்ஸ்வெய்ல், 2012ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். ஐபோனின், குரலைக் கண்டுபிடிக்கும், "சிரி' என்னும் மென்பொருளைப் போன்று, இவர் கண்டுபிடித்துள்ள, கம்ப்யூட்டருடன் பேசினால், கண்டுபிடித்து பதில் அளிக்கக்கூடிய தொழில்நுட்பம், தானியங்கி கார்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக, மனிதர்களை விட அதிகமான செயற்கை அறிவுத்திறனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் 2029ம் ஆண்டில், கம்ப்யூட்டர்களும், ரோ போக்களும், மனிதர்களை விட அதிகமான அறிவுத் திறனுடன், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.