Header Ads



பாடசாலை அதிபர்களுக்கு பேஸ்புக் தொடர்பில் பயிற்சி


பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தள பாவனையின் போது மாணவர்கள்  பின்பற்ற வேண்டிய விடயங்கள்  தொடர்பில் அதிபர்களை  தெளிவுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது கட்டமாக தேசிய பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க தெரிவித்தார்.

இதன் பொருட்டு கொழும்பில் செயலமர்வொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மற்றும் அதற்கு வெளியில் மாணவர்களின் இணையத்தள பாவனையின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அவற்றை மேற்பார்வை செய்யும் வழிமுறைகள் தொடர்பில் அதிபர்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளனர்.

இதனை தவிர,  சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள கேந்திரமயப்படுத்தப்பட்ட பாடசாலை குழுக்கள் தொடர்பிலும் அதிபர்கள் தெளிவூட்டப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.