தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் - பொதுபல சேனா
இலங்கையில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் மிதமிஞ்சிய முஸ்லிம் குடியேற்றங்களை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் சிங்கள தமிழ் மக்களையும் இணைத்து குடியமர்த்த வேண்டுமென பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் எனவும அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞனசார தேரர் தெரிவித்தார்.
இன்று 20-03- 2014 வியாழக்கிழமை கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தேரர் மேலும் தெரிவிக்கையில்,
வில்பத்துவில் இருந்து மன்னார் வரையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முஸ்லிம் குடியேற்றங்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு வடக்கிலும் முஸ்லிம் ஆதிக்கத்தை பரப்பச் செய்து சிங்கள, தமிழ் மக்களை புறக்கணிக்கும் இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
முஸ்லிம் மதவாதத்தை பரப்பி இலங்கையை சீரழிக்கும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாடடோம் என அவர் மேலும் தெரிவித்தார். vi
ஒன்ன முதல்ல போட்டு தள்ள வேண்டும். அப்பதான் நாடு முன்னேறும்.
ReplyDeleteஇவரின் செய்திகளைப் பிரசுரிக்கும் ஜப்னா முஸ்லிமுக்கு நன்றி. இவரின்செய்தியை வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது. இவருடைய எல்லா செய்திகளும் ஜோக் தானே. படிப்பறிவில்லாத பைத்தியக் காரர்கள் பேசும் போது சிரிப்பு வருவது சகஜமே. இவர் தன்னை ஜனாதிபதியாக நினைக்கிறார் போன்று தெரிகிறது.
ReplyDelete