Header Ads



கல்முனை அனர்த்த பாதுகாப்பு கல்வி தொடர்பான எழுத்துப் பரீட்சை - முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்


(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை கல்வி வலயத்தினால்  வலய  மட்டத்தில் நடாத்தப்பட்ட  அனர்த்த பாதுகாப்பு கல்வி தொடர்பான எழுத்துப் பரீட்சையில்  முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழும் கேடயமும் வழங்கி வைக்கும் நிகழ்வு  அனர்த்த பாதுகாப்பு கல்வி வலய  இணைப்பாளர்  ஏ.ஏ.சத்தார்  தலைமையில்  வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இன்று (10) நடை பெற்றது. 

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சான்றிதழ்களையும் .நினைவு கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம். தௌபீக்,பீ.எம்.வை.அரபாத் ,கணக்காளர் எல்.ரீ.சாலித்தீன் உட்பட கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.ஏ.ஜகுபர் ,எஸ்.எல்.எம்.சலீம்,பரதன் கந்தசாமி மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

பிரிவு ஒன்றில்  மாவடிப்பள்ளி அல் -அஷ்ரப் மகா வித்தியாலய மாணவன் எம்.எப்.மிஹ்சான் முதலாமிடத்தையும் ,பிரிவு இரண்டில் கல்முனை  அல் -அஸ்கர்  வித்தியாலய மாணவி ஏ.எஸ்.எப்.பர்ஹத் முதலாமிடத்தையும்,மூன்றாம் பிரிவில் மருதமுனை புலவர் மணி சரிபுதீன் வித்தியாலய மாணவி எம்.யு.சஜானா முதலாமிடத்தையும் , பிரிவு நான்கில் கல்முனை அல் -பஹ்ரியா  மகா வித்தியாலய மாணவி எஸ்.எச்.எப்.நுஷ்ஹா   முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.



No comments

Powered by Blogger.