இந்த அரசாங்கத்தை வெளியேற்ற நாங்கள் தயார் - கபீர் ஹாசிம்
மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதான கட்சிகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இந்த முறை மாகாண சபை தேர்தலில், பொது எதிர்கட்சி ஒன்றிற்கான ஆணையை வழங்கியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இவ்வாறு குறிப்பிட்டார்.
எப்போதும் இந்த அரசாங்கத்தை மாற்ற முடியாது என கூறிவந்த இந்த அரசாங்கத்திற்கு பொது எதிர்கட்சியாக ஒன்றிணைந்து சரியாக செயல்படுவானார்களானால் இந்த அரசாங்கத்தை வெளியேற்ற நாங்கள் தயார் என பொதுமக்கள் இந்த தேர்தலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
This is dream for all of you
ReplyDelete