வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூபினை தாக்குவதற்கு முயற்சி (படங்கள்)
(பா.சிகான்)
வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூபினை தாக்க முயன்றதனால் கூட்டத்தில் பதற்ற நிலை தோன்றியது.
யாழ். மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலைகள் , யாழ். ஒஸ்மானியா கல்லூரி யாழ் கதீஜா கல்லூரி மீளத்திறப்பு தொடர்பான இன்று 03-03-2014 நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்விலே மேற்படி சம்பவம் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வில் கருத்துரை வழங்கி கொண்டிருந்த மாகாண சபை உறுப்பினர் தெரிவித்த கருத்தினை ஏற்க முடியாத ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரே இத்தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது சுதாகரித்த மாகாண சபை உறுப்பினர் தொடர்ந்த உரையாற்றியதுடன் கூட்டமும் தீர்மானம் எதுவுமின்றி நிறை வேறியது. மேற்படி நிகழ்விற்கு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் உட்பட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தி.குருகுலராஜா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
Nammavarin pirachchinaiyae ottrumai. Nee periyawana illai naan periyavana endra kedu ketta gourawam thaan...
ReplyDelete