இந்தியாவே எமது முதல் எதிரி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
நேரத்திற்கு ஏற்ப தாளம் போடும் இந்தியாவே எமது முதல் எதிரி. எனவே சம்பூரில் இருந்து உடனடியாக இந்தியாவை விரட்டியடித்து, சம்பூர் அனல்மின் திட்டத்தினை உருவாக்கும் அதிகாரத்தினை சீனாவிற்கு வழங்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுடனான உறவை உடனடியாக முறித்துக்கொண்டுஇ சீனாவுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் அவ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்தபண்டார தெரிவித்துள்ளார்.
இதுவரை நாம் பரிந்துரைத்த எல்லாவற்றையும் அரசாங்கம் கேட்காமையாலேயே இன்று எமக்கு ஜெனிவா வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது நாம் கூறுவதை அரசாங்கம் செவிமடுத்து கேட்க வேண்டும்.
நாம் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் எப்போதும் எம் உறவை பலப்படுத்த வேண்டும். ஏனெனில் சர்வதேசத்தில் அவர்களே எமக்கு ஆதரவாக உள்ளனர்.
எம்மிடம் உண்மையான உறவு கொண்டது சீனாவும், ரஷ்யாவுமே. மாறாக இந்தியா அல்ல. இந்தியா ஒரு பச்சோந்தி கடந்த காலத்தை உற்றுநோக்கினால் எப்போதுமே இந்தியா எமக்கு நன்மை பயத்ததில்லை.
அத்துடன் எமக்கு நன்மைதரும் எந்த செயலையும், இந்தியா இதுவரை செய்யவில்லை. எனவே, இந்தியாவை எம் நாட்டில் கால்பதிக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் எமக்கெதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நினைத்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது எமக்கு தேவையற்றதொன்று, அதற்கு நாம் அடிபணியக்கூடாது.
எமது நாட்டு அரசாங்கத்திற்கும் எம்மை ஆட்சி செய்யும் ஜனாதிபதிக்கும் மட்டுமே நாம் அடிபணிய வேண்டும். மாறாக அமெரிக்காவிற்கும் ஜெனிவாவிற்கும் நாம் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை.
ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை நவநீதம்பிள்ளை, அமெரிக்கா, மேற்கத்தைய நாடுகள் என்பனவற்றுடன் நம் நாட்டில் உள்ள சில தீயசக்திகள்
Post a Comment