Header Ads



ஓரினச் சேர்க்கை விவகாரம் கொலையில் முடிந்தது - பேஸ்புக்கும் காரணம்..!

(Vi) பேஸ் புக் சமூக வலைத்­த­ளத்தை பல்­வேறு குற்றச் செயல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வது விஷேட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்­தினால் தற்­கொ­லைகள் மட்­டு­மன்றி கொலை, கொள்ளைச் சம்­ப­வங்­களும் இலங்­கையில் நடத்­தப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களால் மாண­விகள் உட்­பட சிலர் தற்­கொலை செய்­து­கொண்­டி­ருந்­தனர். இந் நிலையில் நுகேகொடை பகு­தியில் அண்­மையில் வர்த்­தகர் ஒருவர் கொலை செய்­யப்­பட்­ட­மை­யு­டனும் பேஸ்புக் தொடர்பு பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 

பேஸ் புக் சமூக வலைத்­த­ளத்தில் உள்ள ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­களில் முகப் புத்­தக பக்கம் ஒன்­றி­னூ­டாக குறித்த வர்த்­தகர் இளைஞர் ஒரு­வ­ருடன் தொடர்பு பட்­டுள்ளார். மொறட்­டுவை பகு­தியை சேர்ந்த குறித்த இளைஞர் வர்த்­த­க­ருடன் ஓரினச் சேர்க்­கை­யா­ளரைப் போன்று தன்னை அடை­யாளப்படுத்­திக்­கொண்டு ஒரு நாள் வர்த்­த­கரின் வீட்­டுக்கு சென்­றுள்ளார். முகப்­புத்­தகம் ஊடாக தன்னை ஓரினச்சேர்க்­கையில் ஆர்வம் உள்­ளவை போன்றே அடை­யாளம் காட்­டி­யுள்ள குறித்த இளைஞர் கொலை இடம்­பெற்ற நாளன்று தனது கொள்ளைக் குழு­வுடன் நுகே­கொ­டையில் வர்த்­த­கரின் வீட்­டுக்கு சென்று இந்த கொலையை செய்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

மொறட்­டுவைப் பகு­தியை சேர்ந்த குறித்த இளஞர் உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் இதே முகப்­புத்­தக பக்­கத்தில் தம்மை ஓரினச் சேர்க்­கை­யா­ள­ராக அறி­முகம் செய்­து­கொண்டு இதற்கு முன்­னரும் நாவல பிர­தே­சத்தில் கொள்­ளை­யிட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

ஓரினச் சேர்க்கை தொடர்பில் இந்த கொள்­ளைகள் இடம்­பெறும் போது அது தொடர்பில் பொலிஸில் முறை­யிட கொள்­ளை­யி­டப்­பட்­ட­வர்கள் முன்­வர மாட்­டார்கள் என்­பதை அறிந்தே இந்த கொள் ளை சம்­பவம் துணி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நுகே­கொடை பகு­தி­யிலும் குறித்த இளைஞர் உள்­ளிட்ட குழு கொள்­ளையிட முனைந்த போது வர்த்­தகர் அதனை எதிர்த்து நின்­ற­மை­யினால் அவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எனவே, பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது பெண்கள், சிறுவர்கள் மட்டுமன்றி அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.