ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளுக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கம் வழங்கினார்
மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்தசமரசிங்க ஜெனீவாவில் வைத்து, முஸ்லிம் நாடுகளின் ஒழுங்கமைப்புக்கு, இலங்கை தற்போதைய சூழ்நிலை தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் உள்ள பெலேய்ஸ் டெஸ் நேசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மனித உரிமைகள் விடயங்களில் இதுவரையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவரால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கை நீண்டகாலமாக பல்லின சமூகமாக இருப்பதாகவும், இங்கு மதங்களுக்கு இடையிலான பிரிவினைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ புனிதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment