ஜெனீவா பிரேரணை குறித்து அரசாங்கத்துக்கு அச்சமில்லை - ஜனாதிபதி மகிந்த
(Sfm) ஜெனீவாவில் முன்வைக்கப்படும் பிரேரணை குறித்து அரசாங்கத்துக்கும் அச்சமில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் எவையும் புதியவை இல்லை.
யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இருந்து அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில் அவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவோ, பிரேரணைகள் தொடர்பாகவே தமக்கு அச்சம் ஏதும் இல்லை.
எவ்வாறான சவாலானாலும் சமாளிக்கும் திறன் அரசாங்கத்திடம் இருக்கிறது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment