சரியாக பரீட்சை எழுதாத பயத்தில் இந்திய மாணவன் ஷார்ஜாவில் தற்கொலை
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் ஷார்ஜாவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 16 வயது மகன் அங்குள்ள இந்திய பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆண்டிறுதி தேர்வெழுத செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன் வீடு திரும்பாததை அறிந்து பதறிப்போன பெற்றோர், அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப்பார்த்தும் அவனைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்காததால் அவனை தேடிக் கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கேரள தம்பதியர் வசித்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியில் ஒரு சிறுவன் தூக்கில் பிணமாக தொங்குவதாக ஷார்ஜா போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் பிணத்தை தூக்கில் இருந்து இறக்கி பார்த்தபோது காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்ட மாணவனின் பிரேதம்தான் அது என்பதை அறிந்து பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
கதறியபடி ஓடி வந்த பெற்றோர், ஆண்டிறுதி தேர்வுகளை சரியாக எழுதாததால் கடந்த சில நாட்களாகவே தங்களது அன்பு மகன் சோகமாக காட்சியளித்ததாகவும், இப்படி ஒரு துயர முடிவை எடுப்பான் என தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
Post a Comment