Header Ads



இலங்கை முஸ்லிம்களது இழப்பை, குறைவாக மதிப்பீடு செய்துள்ள சர்வதேசம்

இலங்கை அரசுக்கெதிராக அமெரிக்க தலைமையில் கொண்டு  வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக இப்பிரேரணை அரசுக்கெதிராக அங்கீகாரம் பெறுகின்ற போது எவ்வாறு நடப்பு அரசையும், தேசிய அரசியல்இ பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெருகின்ற இத்தருனத்தில் முஸ்லிம்களது நிலைப்பாடு பற்றி தெளிவான கருத்துக்கள் இன்னும் பதியப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது என்று ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஜூனைட் நளீமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஜூனைட் நளீமி தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.

கடந்து போன இலங்கையின் உள்நாட்டுப் போரில் முஸ்லிம்கள் மிக மோசமாக பாதிப்படைந்த சமூகம் என்பதனை டுடுசுஊ ஆணைக்குழு குறிப்பிடத்தவரியது போன்று சர்வதேசமும் புறக்கணிப்புச்செய்துள்ளது என்பதனை ஜெனிவாவில் இடம்பெரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் முனவைக்கப்பட்டுள்ள நகழ்பிரேரணையை வாசிக்கின்ற போது அவதாணிக்க முடிகின்றது.

குறிப்பாக டுடுசுஊ ஆணைக்குழுவினால் இழப்பீடுகள், போர்க்குற்றங்கள் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதியும் கால எல்;லையாக வெருமனே  2002 தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தம் தொடங்கியதாக கருதப்படும் காலப்பகுதியில் இருந்தே முஸ்லிம்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளமை மறக்கடிப்புச்செய்யப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டுள்ளது. பயங்கர வாத ஆயுதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள், பலாத்கார இனச்சுத்திகரிப்பு பற்றி பதிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் அழுத்தமாக மேற்கொள்ளப்படவில்லை. இந்த சூட்சுமத்தையே சர்வதேசமும் கைப்பிடித்து முஸ்லிம்களது நியாய பூர்வ எதிர்பார்ப்புக்களை புறந்தள்ளி உள்ளமை முன்வைக்கப்பட்டுள்ள நகழ்ப்பிரேரணை மூலம் தெரிய முடிகின்றது.

குற்றவாழிக்கூண்டில் இந்திய அரசும் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படவேண்டும்.
இலங்கையின் உள்நாட்டுப்போரில் மிக முக்கிய பாத்திரம் வகித்த இந்திய அரசு சர்வதேசத்தின் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி வரையறை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பயங்கர வாத குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி, ஆயுதம் வழங்கியமை, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடகிழக்கில் படைப்பலத்தை பிரயோகித்து அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களை கொன்று குவித்தமை, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் இந்திய அரசும் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும். ஆனால் அரசியல் பின்புலங்களைப்பயன்படுத்தி இவற்றையெல்லாம் மூடிமறைக்க முற்பட்டுள்ளமை சர்வதேசத்தின் நடு நிலைமையினை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இந்தவகையில் இந்திய இராணுவத்தினால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச்சம்பவங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசியல் கட்சி முறைமை இனரீதியாகவே தாக்கம் செலுத்திவருகின்றது. இனத்துவ ரீதியான முன்மொழிவுகளே இறுதியில் ஆட்சி பீடம் ஏற வாய்ப்பளிக்கின்றமையை கானமுடிகின்றது. இன்று அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணையானது பெரும்பானமை சிங்கள சகோதர இன மக்களிடம் தற்போதய அரசின் மீது அநுதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்தகால கொடூர யுத்தத்தினால் நாளாந்தம் பல சடலங்கள் தென்பகுதியை நோக்கி கொன்டுவரப்பட்டு வருடங்கள் பூராகவும் துக்கம் கொண்டாடிய நாட்களிலிருந்து விடுபட்டதாகவே இறுதி யுத்த வெற்றியை பெரும்பான்மையினர் கருதுகின்றனர். எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும்  துட்டகைமுனு என்ற சிங்கள அரசனுக்கும் இடையிலான யுத்தமாகவும் சில போது அதனையும் மீறி இரு இனங்களுக்கிடையிலான யுத்தமாகவுமே இது பிரச்சார உருப்பெற்றது. 

எனவே தோற்கடிக்கப்பட்ட சிறுபான்மை இனம் அமெரிக்க உதவியோடு மீண்டும் நாட்டைப்பிரித்து விடும் என்ற அச்ச சூழ்நிலையில் பெரும்பான்மை சகோதர இன மக்கள் கட்சி அரசியலுக்கப்பால் நடப்பு அரசை ஆதரிக்க முற்படுகின்ரனர். குறிப்பாக இவ்வாண்டு நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேற்தலுக்கு நாடி பிடிக்கும் தேர்தலாக மேல் மாகாண, தென்மாகாண தேர்தல்கள் அமைந்துள்ள நிலையில் குறிப்பாக தேர்தல் தினத்தன்று கொண்டு வரப்படுகின்ற இலங்கைக்கெதிரான பிரேரணை ஆளும்தரப்பினை வழுப்படுத்துவதாக அமையும். இந்த தேர்தல் சூடு தனியுமுன்னர் ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது ஐ.நா வும் சர்வதேச விசாரணைக்குழு என்ற மாயையை பிரேரணையாக முன்மொழிய வாய்ப்பு இருக்கின்றது. அக்குழு குறித்த ஒரு ஆறு அல்லது அதற்கும் குறைவான கால எல்லைக்குள் தமது முடிவினை வெளிப்ப்டுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றபோது ஜனாதிபதி தேர்தலுக்கான அநுதாப அலையினை அரசு இப்பிரேரணையூடாக பெற்றுக்கொள்ளும்.

இலங்கை மீதான பிரேரணைகளை முன்மொழிந்துள்ள அமெரிக்க தலைமையிலான நாடுகளைப்பொருத்தவரை அவை புழம்பெயர் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்தே செயற்படுவதை அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசினையும் நாடாலுமன்ற, உள்ளூராட்சி ஆசனங்களை தீர்மானிக்கும் சக்திகளாக புலம்பெயர் தமிழ் சமூகம் கானப்படுகின்றது. எனவே அத்தகையவர்களின் வாக்கு வங்கிகளும் குறிவைக்கப்படுகின்றது. ஆனால் இலங்கை திறந்த பொருளாதார கொள்கையையும், மேற்கத்தய பூகோலமயமாதல் கலாசாரத்தையும் பின்பற்றுகின்ற மேற்கு சாயல் நாடென்பதினால் ஒரு போதும் நடைமுறை அரசினை ஒரு சவாலாக மேற்கு கருதவில்லை என்பதுவே யதார்த்தமாகும். பெயரளவில் பௌத்த நாடு என்ற கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் நடைமுறையில் உலகமயமாதல் சிந்தணையில் முழுக்க கறைந்து போயுள்ளதனை மேற்கு சாதகமாக கான்கின்றது. எனவே எத்தகைய பிரேரணைகள் ஐ.நாவில் முன்வைக்கப்படுகின்ற போதும் அவை வெரும் கண்துடைப்பாகவே அமையும். 

இஸ்ரேல் மீது கொன்டுவரப்பட்ட இத்தகைய பிரேரணை பூசி மெழுகப்பட்டது வரலாறாகும். இஸ்ரேல் ஐ.நாவின் நிபுணர்குழுவினை தனது நாட்டிற்குள் அநுமதிக்கவில்லை. ஆறு மாதங்களின் பின்னர் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான குழு 'இஸ்ரேல் மனித உரிமைகள் விடயத்தில் மேம்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டு இஸ்ரேலுக்கெதிரான பிரேரணையை வாபஸ் வாங்கி கொன்டமை குறிப்பிடத்தக்கது. இன்று இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் நவனீதம் பிள்ளையின் வகிபாகம் ஒரு ஐ.நா அதிகாரி என்பதற்கப்பால் தமிழர் என்ற அநுதாபம் களந்த அறிக்கையாக அமைந்துள்ளது. என்ற போதும் டுடுசுஊ ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முழு அறிக்கை வடிவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஆனைக்குழு கானாமல் போனோர் விடயம் உள்ளிட்ட விடயங்களில் மீன்டும் செயற்பட ஆரம்பித்ததும் கானமல் போனோர் தொடர்பில் அதிகம் சர்வதேசம் கவனக்குவிப்பை மேற்கொண்டுள்ளதால் இன்னும் மேலதிக ஆறு மாதங்களை அரசு கோறியிருப்பதும் இஸ்ரேலிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக நோக்கத்தக்கது. புதிய மனித உரிமைகள ஆணையாளர் பதவியேற்று பின்னர் மீண்டு அவரது இலங்கைக்கான விஜயம், ஐ.நாவின் அறிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் என பலவிடயங்கள் அறிக்கைகளாவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கெதிரான பிரேரணை தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவினை இம்முறையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தெளிவாக முன்வைக்க தவரியுள்ளன. 

குறிப்பாக குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க நினைக்கும் சில இனவாத சக்திகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறுகிய இலாபங்களை அடைய முனைவதனையும் கானமுடிகின்றது. உதாரணமாக ஜெனிவா விடயத்தில் அரசுக்கு ஆதரவு தருவதாக கூறிக்கொண்ட ஒரு தரப்பு கல்முனைப்பிரதேசத்தினை இனரீதியில் கூறு போட முனைந்தமையை குறிப்பிட முடியும்.

சந்தர்ப்பங்களைப்பயண்படுத்தி குளிர்காய முற்படும் இன்னொரு சமூகம், இலங்கை முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பாளர்கள் என்ற கோஷத்துடன் இனவாதம் கக்கும் பேரினவாத அமைப்புக்கள், மியன்மார் மனிதப்படுகொலையின் சூத்திரதாரியின் இலங்கைக்கான கிளை அமைக்கும் முயற்சி என பல்வேறுபட்ட எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கும் வாழ்வியல் ஒழுங்குகளுக்கும் விடையளிக்க வேண்டிய நிலையிலிருந்து முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருத்துக்களும், மாறுபட்ட செயற்பாடுகளும் அமைந்திருப்பது உசிதமானதாக கருத முடியாது. சென்றமுறை முஸ்லிம் அமைப்புக்கள் தமது விசுவாசத்தைக்காட்டிய போதும் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளைக் காரணம் காட்டி மௌனித்திருக்க முடியாது. சென்ற முறை முழுக்க அரசியல் தலைமைகள் ஜம்மியதுல் உலமாவை பலிக்கடாவாக்கி தாம் நழுவிக்கொன்டமை இம்முறை ஜம்மியதுல் உலமாவை களத்தில் மெலனிக்கச்செய்துள்ளதுடன் அரசியல் தலைமைகள் சரிவர தமது பணிகளை மக்கள் முன் கொண்டு செல்லத்தவரியமையினால் ஜம்மியதுல் உலமா பல தேவையற்ற விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டமை கவலைக்குறியது. உள்நாட்டு சட்ட வழிமுறைகளை பயண்படுத்தி எந்தவொரு சட்டநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் வெற்று அறிக்கைகளோடு நின்றுகொள்வது அரசுடனும், பெரும்பான்மை சகோதர சமூகத்துடனும் முறுகள் நிலையினை அதிகரித்துக்கொன்டே இருக்கின்றது. பொஸ்னியாவில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை மேற்கொண்ட மிலோச்சவிக் மீது ஐ.நா நடவடிக்கை எடுக்க பூகோல அரசியல் ரீதியில் ரஷ்ய தலையீட்டை தடுத்து தமது ஆதிக்கத்தை பொஸ்னிய பிராந்தியம் மீது தக்க வைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சி மேற்கொண்டதுடன், ஐரோப்பாவுக்கான எரிவாயு, எண்ணெய் வர்த்தக வியாபார நடவடிக்கையை தமது கட்டுப்பாடுக்குள் வைத்துக்கொள்ளவே களமிறங்கியது. ஆனால் உகன்டா விடயத்திலோ, சூடான் விடயத்திலோ வெறும் தீர்மானங்கள் மாத்திரமே எழுத்துவடிவில் கானப்படுவதனை ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும். எனவே இலங்கை அரசுக்கெதிரான தற்போதய பிரேரணை கூட எவ்விதத்திலும் தற்போதய ஜனாதிபதி மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ பாறிய தாக்கத்தினை ஏற்படுத்த முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியானதாகும்.

எனவே இரும்புக்கதிரை கதை சொல்லி முஸ்லிம் சமூகத்தை உசுப்பேற்றி விட்டு களநிலையில் முஸ்லிம்கள் மீதான பிழையான கண்ணோட்டங்களை இலங்கை சமூகத்தில் விதைக்க முனையும் தவரினை முஸ்லிம் அரசியல் செய்யக்கூடாது. 

எனவே ஜெனிவா விடயத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நாட்டுப்ப்ற்றாளர்களாக வாழ முடியும் என்பதனை தெளிவுபடுத்துவதுடன், டுடுசுஊ மற்றும் ஜெனீவா பிரேரணையில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி  ஏனைய தமிழ், சிங்கள சகோதர சமூகங்கள் நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொள்ளும் போது எமது சமூகமும் பெற்றுக்கொள்ள அரசியல் தலைமைகள் செயற்படுவதற்கான அழுத்தமான கட்டமைப்பினை முஸ்லிம் புத்தி ஜீவிகள் முன்வைக்க வேண்டும். குறிப்பாக தமிழ் சகோதர இனம் பெரும்பான்மையாக வாழுகின்ற வடமாகாண சபைக்கான அதிகார பகிர்வு தொடர்பில் இந்தியாவும் சர்வதேசமும் அழுத்தங்களை இலங்கை அரசு மீது திணிப்பது போன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாண சபைக்கும் போதிய அதிகார பகிர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என கோறிக்கை விடுப்பதும் காலத்தேவையாகும்.

No comments

Powered by Blogger.