சவூதி அரேபிய குழுவினர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்
(எம்.ஏ.றமீஸ்)
கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவின் பிரபல முதலீட்டுக் கம்பனியின் முக்கியஸ்தர்கள் அடங்கி தூதுக் குழுவினர் இன்று (04) கிழக்கு மாகாணத்திலுள்ள முக்கிய இடங்கள் பலவற்றிற்குச் சென்று ஸ்தலங்களைப் பார்வையிட்டனர். அப்துல் றஊப் அல்-இஸாயி தலைமையில் ஒலுவில் துறைமுகத்திற்கு வருகை தந்த தூதுக் குழுவினரிடம் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியதுடன், பல்வேறு துறைகளுக்கான முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய ஆலோசனைகளும் இதன்போது பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment