Header Ads



அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுள்வேத நோயாளர் விடுதிக் கட்டிடம் எப்போது திறக்கப்படும்..?


(மக்கீன் புஹாரி)

கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 1.7 கோடி நிதியின் மூலம் கட்டப்பட்ட அட்டாளைச்சேனை சேனை மாவட்ட ஆயுள்வேத நோயாளர் விடுதிக் கட்டிடம் இன்று வரையிலும் திறக்கப்படாமல் இருப்பது இப்பிரதேச மக்களும் மற்றும் வைத்தியசாலைற்கு வரும் நோயாளினால் மிகுந்த விசனத்தை தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வைத்தியசாலை கடந்த பல வருட காலமாக ஒரு சிறிய கட்டிடத்தில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தங்கியிருக்கும் ஆண், பெண் நோயாளர் அத்துடன் நிருவாகப் பிரிவும் இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே இந்தக்கட்டிடம் அமைக்கப்பட்டும் இதுவரையிலும் திறந்துவைக்கப்படவில்லை.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரே, கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளரே இது உங்களின் கவனத்திற்கு

No comments

Powered by Blogger.