Header Ads



புதுக்கடையில் ஜே.வி.பி கூட்டமும், நவ்சர் பௌஸியின் ஊர்வலமும்


(ஒற்றன்)

நேற்று மாலை 7மணி முதல் இரவு 10 மணிவரை ஜே.வி.பி. வெற்றிகரமாக புதுக்கடையில் தனது தேர்தல் பிசாரக் கூட்டத்தை நடத்தியது. பெரும் தெகையான மக்கள் இங்கு வருகை தங்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஜே.வி.பி. சார்பில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களும் அந்தக் கட்சியில் சார்பில் போட்டி போடுகின்ற சிங்கள வேட்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அணுரகுமார திசாநாயக்க ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு உணர்வுபூர்வமாக உரையாற்றினார். அவரது உரையை கரகோசம் செய்து மக்கள் இடையிடையே உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். ராஜபக்சா குடும்பத்தினர் இந்த நாட்டை எப்படி சூறையாடுகின்றனர் என்பதே அவரது பேச்சின் தெணிப் பொருளாக இருந்நது.

ஏழை மக்களின் வாகானமான முச்சக்கர வண்டியின் சந்தை விலை  ஒன்றரை இலட்சம் ரூபாய்.  அதற்கு மூன்று இலட்சம் வரியை அறவிட்டு  நாழு இலட்சத்து ஐம்பதாயிரம் என்ற தொகையில் இதனை விற்று கீழ் மட்ட மக்கள் பணத்தை கொள்ளையடித்து அரசை நடாத்தும் ஜனாதிபதி. தனது பிள்ளைகளுக்குத் தேவையான பந்தயக் கார்களை இறக்குமதி செய்கின்ற போது ஒரு சதம் கூட வரி-தீர்சையில்லாது அதனை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கின்றார். இது எந்தவகையில் நியாயம். இவர்கள்தானா தேசப்பற்றாளர்கள். மேலும் ஜனாதிபதியின் பிள்ளைகள் தமது கால்களுக்குப்போடுகின்ற சப்பாத்துக்களின் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பி அதன்விலை ஒன்றரை முதல் ஐந்து இலட்சம் வரை என்று அவர் கணக்குப் போட்டுக் காட்டியதுடன் இவற்றபை; நான் பொறுப்புடன் தான் இங்கு பேசுகின்றேன் என்று அங்கு குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கின்றபோது சரியாக இரவு 8.30 மணிக்கு நவ்சார் பௌசி ஆதரவாலர்கள் ஐம்பது அறுபது பேர் அந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தில் ஊர்வலமொன்றை  இடத்தில் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இடைக்கிடையே பட்டாசு போட்டு அந்த கூட்டத்தை குழப்புகின்ற வகையில் நடந்து கொண்டிருந்தனர். 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கைகயான மக்கள் நவ்சரின் - இந்த நடவடிக்கை நாகரிகம் இல்லாத ஒரு செயல் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு நடந்து கொள்கின்ற அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அங்கு மக்கள் தமக்குள் பேசிக் கொண்டனர். இந்த அநாகரிகமான நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் ஜே.வி.பி.யினர் தமது உரையைளை அங்கு நிகழ்திக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் அநேகம்பேர் இந்தமுறை நாம் ஜேவிபிக்குத்தான் வாக்களிக்க இருக்கின்றோம். அரசியல் வன்முறைப் பண்ணுகின்றவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் பேசிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. 

No comments

Powered by Blogger.