Header Ads



நல்லாட்ச்சிக்கான மக்கள் இயக்கத்தின் மாநாடு அவசியமற்றது - அஷ்ஷெஹ் ஜஸ்ரி ஜவாப்தீன்

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் - அஷ்ஷெஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி) 

2014.03.02 அன்று காத்தான்குடியில் நடைபெற்ற நல்லாட்ச்சிக்கான மக்கள் இயக்கத்தின் மநாடு தற்போதய சூழலை பொறுத்தமட்டில் அவசியமற்றதொன்றாகும். ஏனெனில் சிங்கள றாவய, பொதுபல சேனா போன்ற பெரும்பான்மை சமூக அரசியல் கட்சிகள் முஸ்லிம்களினுடைய கல்வி, பொருளாதார ,கலாசார போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிப்பதற்கு தடையாகச் சட்டமூலங்களை வகுத்து வருகின்றனர்.

ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை நம்பிக்கையோடு பார்க்க வேண்டிய நிலைமை மாறி சந்தேகத்தோடு பார்க்கின்ற மனோநிலைமை உருவாகிக் கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தை பொருத்த மட்டில் முஸ்லிம்கள் கௌரவமாகவும் அச்சமின்றியும் வாழுகின்ற இச் சூழ்நிலையில் இறைநாமங்களை கூறி பிளவுகளை ஏற்படுத்தி விட வேண்டாம். அரசியல் செய்யுங்கள் ,சமூகப் பணியை தாராளமாக நிறைவேற்றுங்கள் ஆனால் சமூகத்தின் பெயரால் விரிசல்களைத் தோற்றுவித்து இன்னுமொரு பிளவுக்கு தூபமிடுவதாக அமைந்து விடவேண்டாம்.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் அவர்களைச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து  மூதூருக்கு கிடைக்கவிருந்த மாகாண சபை பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த மிகப் பெரும் சமூகப் பணியை நல்லாட்ச்சிக்கான மக்கள் இயக்கம் செய்திருந்ததை மூதூர் சமூகம் மறந்துவிடவில்லை. இது முஸ்லிம் அரசியலில் ஒரு  வறலாற்றுத் துரோகம் என்பது நினைவிருக்கட்டும்.காத்தான்குடி சகோதரர்களை திருகோணமலை மாவட்ட அரசியல் அரங்கில் நிறுத்தி வாக்களிக்க சொன்னீர்களே இது நினைவிருக்கிறாதா? இதுதான் நாகரீகமான அரசியல் கலாசாரமா?; 

தங்களது மகாநாட்டில் சகோதரர் பிர்தௌஸ அவர்கள் உரையாற்றுகின்ற போது அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த அரசியல் கலாசாரம் என்றால் என்ன? என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? வெறும் வார்த்தை ஜாலங்களை பிரயோகித்து அரசியல் நடத்தாமல் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி செயற்படுங்கள். 

சிலர் மக்களுக்கு விளங்காத, கிரகித்துக் கொள்ள முடியாத இலக்கிய  நடையில் உரையாற்றி இது சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறது என நினைத்துக் கொண்டிருக்கிரார்கள்.  எனவே எதிர் கால அரசியல் நடவடிக்கைகளில் பக்க சார்பற்ற , பிறரை விமர்சிக்காத நாகரீமான அரசியல் போக்கையும் பின்பற்றறுவீர்களேயானால் சமூகத்தின் இருப்பை மற்றய சமூகத்திற்கு காட்;டிக் கொடுக்காத பன்பாட்டு அரசியலை எடுத்துச் செல்லுங்கள்.


1 comment:

  1. நீங்கள் யாருக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே இங்கு தெளிவில்லை,உங்கள் பேச்சிலா அல்லது இந்த செய்தி கொடுக்கப்பட்ட/எழுதப்பட்ட விதத்தில் மயக்கமா தெறியவில்லை.

    நளீமியா முடித்த மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தை தெறிந்ததைவிடவும் அரசியலை நன்கு தெறிந்ததால்தான் மார்க்கத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளி,மார்க்கத்தை படிக்க சென்ற இவர்களால் மார்க்கத்திற்கு எதுவுமே பயனில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

    நீங்கள் தாடிவையுங்கள்,மீசையை கத்தரியுங்கள்,அதனால் யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்வீர்கள் என்று சொல்லப்பட்ட வலியுருத்தப்பட்ட நபிகளாரின் கட்டளையை மார்க்க மேதை அஷ்ஷேக் ஜஸ்றி ஜவாப்தீனாவது( நளீமீ)நிறைவேற்றியுள்ளாரா என்றால் இல்லை என்றே இங்கு சொல்ல வ்ஏண்டியுள்ளது.மார்க்கத்தை விட்டும் தூரமாகும் எங்களுக்கு அப்போ எப்பொழுது இறைவனின் நல்லாற்ச்சி கிட்டும்?பாமர மக்களை குறைகூறி எந்தப்பயனுமில்லை,இவர்கள் இப்படி இருக்கும்போது.

    மார்க்கத்தை தழுவி வரும் பின்னூட்டங்களை ஜப்னா முஸ்லிம் எப்பொழுதும் தட்டிவிடுகிறது,தயவுசெய்து தட்டவேண்டாம்,உண்மைகளை மக்களுக்கு சொல்லும் வழிகளில் இதுவே மிக முக்கியமும் தேவையும்.

    ReplyDelete

Powered by Blogger.