மக்ககள் எம்முடன் இருக்கும்வரை ஜெனீவா பிரேரணை தொடர்பில் கவலையில்லை - ஜனாதிபதி மஹிந்த
எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையின் பின்னணியில் மறைந்த நோக்கம் ஒன்று இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், மக்கள் தம்முடன் இருக்கும் வரையில் இவ்வாறான பிரேரணை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றிடம்பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதனிடையே, இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் இல்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்காக, உள்ளக விசாரணைகள் முன் எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் போது, இந்தியாவின் ஆதரவு கிடைக்க பெறுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்பபட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவில் இடம் பெறவுள்ள தேர்தலை கருத்திற் கொண்டே அதன்தீர்மானம் அமையும் என குறிப்பிட்டார்.
சர்வதேச விசாரணைகள் தேவை என்பதற்காக காட்டப்படுகின்ற காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பபட்டுள்ளன. காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆணைக்குழு அதில் ஒரு கட்டமாகும் என்று ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment