Header Ads



கல்முனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி, கைப்பற்றப்பட்டு அழிப்பு


(யு.எல்.எம். றியாஸ்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பிரதேசங்களில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி,  மற்றும் மாட்டிறைச்சி மூலமான உற்பத்திர்ப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இன்று 03-03-2014 கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களில் பொலிஸாரின் உதவுயுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு வீடுகளில் மறைமுகமாக விற்கப்பட்ட மாட்டிறைச்சியும் , சில உணவகங்களில் மாட்டிறைச்சி மூலமான உற்பத்திப் பொருட்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும்  கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்
எம்.சி.எம்.மாஹிர் ஆகியோர் முன்னிலையில் மாநகர சபை வளாகத்தில் வைத்து எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் மிருக வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஏ.வட்டப்பொல தலைமையில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்புத் தேடுதலின் போது  பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.அரியராஜா, ஜே.எம்.நிஸ்தார், ஏ.எல்.எம்.ஜெரீன், பொலிஸ் அதிகாரிகளான எம்.பி.எம்.முஸ்தபா, எஸ்.ஏ.ஜவாத்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதே வேளை கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர
எல்லைக்குள் மாடுகள் அறுக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




2 comments:

  1. மக்களுக்கு நல்லது போய் சேரவேண்டுமென்பதை விட,தனக்கு பட்டமும் பதவியுயர்வும் கிடைக்கனும் என்ற நோக்கிலேயே நம்மவர் அதிகம் இவைகளில் ஈடுபாடு காட்டுவர்.

    மாட்டுக்கு நோய் இருந்ததோ இல்லையோ,அவைகள் ஏன் சிங்கள ராவயவின் போராட்டத்தின் பின்னர் உடனேயே நோய் என அறிவிக்கப்பட்டன?

    இற்றைவரை,நோய்கள் கண்டறியப்பட்ட முழுதகவல்கள் ஆதாரபூர்வமாக அரசால் வெளியிடப்படவில்லை.

    ReplyDelete
  2. வோட்டுக்காக பிச்சை கேட்கும் எமது தலைவர்கள் குருடர்கள் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இதுதான் கெதி.

    ReplyDelete

Powered by Blogger.