Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் பிழையான நேரத்தில் எடுத்த சரியான முடிவு, பிழையானது..!

(றிசானா பசீர்)

இலங்கையில் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தற்போது மறுக்கப்பட்டு வரும் ஒர் முன்னிலை உரிமைதான் முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களின் மீதான தடைகளாகும். மத சுதந்திரம் பறிக்கப்படுவதாகும். பள்ளிவாசல்கள் கற்களாலும் பொற்களாலும் தகர்க்கப்படுவது. இவ்வாறு தாக்கும் போது முஸ்லிம்கள் பாம்பை விட வேகமாகச் சீறுவார்கள் என்பது தீயசக்திகளுக்கு நன்கு தெரியும். இதை தனிமனிதனோ எந்த முஸ்லிம் அரசியல் வாதியோ பொறுத்துக்கொள்ள மாட்டான்.

இவ்வாறு முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது முஸ்லிம்களின் மிகப்பெரிய சக்தியான முஸ்லிம் காங்கிரசை நோக்கித்தான் கல்லெறி விழும். ஏனைய முஸ்லிம் கட்சிகள் பலமற்றது என்பதால் அவர்கள் இலகுவாகத் தப்பித்து விடுவார்கள். ஆயினும் சிறிய அரசியல் கட்சிகளும் வாயகலப் பேசுகின்றன.

அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் உரிமைகளுக்காகப் போராட ஏனைய முஸ்லிம் பட்சிகள் (பறவைகள்) அபிவிருத்தி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. பாடசாலையில் விளையாட்டும் கல்வியும் போன்று, முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு உரிமைளும் அபிவிருத்திகளும் இன்றியமையாதது. எனவே தற்போது உரிமை அரசியலை விடுத்து அபிவிருத்தி அரசியலையாவது செய்ய வேண்டும். இல்லையெனில் அரசனும் இல்லை புருஷனும் இல்லாமல் முஸ்லிம் காங்கிரசின் நிலை மாறி விடும். 

     முஸ்லிம் காங்கிரஸ் ஐ.நா. ஆணையாளரிடம் கையளித்த கடிதத்தில் எந்தத் தவறுமில்லை. அளித்தே தீரவேண்டும்.  தீய சக்திகள் பயப்படுவது அமெரிக்கா / ஜெனிவா ஒன்றுக்குத்தான். ஆனால் அமெரிக்காவையே எதிர்க்கும் தேரோக்கள் இந்தாட்டில் உண்டு. நவநீதம் பிள்ளையிடம் துணிந்து கையளித்தது மர்ஹீம் அஷ்ரப்பின் மறுபிறப்பை  நினைவுபடுத்துகின்றது. மு.காங்கிரஸ் ஆற்றலை நிருபித்தமைக்கு எனது உளம்களிந்த பாராட்டுக்கள். ஆனால் இது பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். ” பிழையான நேரத்தில் எடுக்கப்படுகின்ற சரியான முடிவுகள்  எப்பவுமே பிழையானது”. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒட்டுண்ணி போன்று ஒட்டிக்கொண்டு அதை நவநீதம் பிள்ளையிடம் கையளித்தது தவறான செயலாகும். இது உண்ணும் பாத்திரத்திலேயே எச்சிலைப் போடுவது போன்றதாகும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றி ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துரைத்த போது அவர் அக்கறை காட்டவில்லை எனில் அரசில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதன்பின் தான் கடிதத்தை கையளித்திருக்க வேண்டும். 

  ஆகையால் இனி தவறு ஏற்படக்கூடாது. எனவே முஸ்லிம் காங்கிரஸ் வண்டியில் புத்தி ஜீவிகளையும் ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடர வேண்டும். குறிப்பாக புத்தி ஜீவிகளாக மருத்துவர்கள் பொறியியலாளர்களைக் குறிப்பிடலாம். சட்டத்தரணிகளோடு இவர்களின் ஆதவும் முஸ்லிம் காங்கிரசிற்கு அச்சாணியாக அமையும். பகுத்தறிவான அரசியலைச் செய்யுங்கள். சிலர் உங்களை  கோமாளியெனவும் கோமாநிலையில் உள்ளவர் என்றும் கிண்டலடிப்பது சற்று கவலை தருகின்ற விடயமாகும். சினிமாப் படங்களைப் போன்று அரசியல் வார்த்தைகள் அமைகின்றன. ஆகவே சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

எது எவ்வாறு எனினும், ரவுப் ஹக்கீம் முஸ்லிம்களின் பிரதிநிதி என்பது ஒன்று. அதிலும் நீதி வழுவா அமைச்சர் என்பது இரண்டு. அடுத்து அமைச்சரவை அந்தஸ்த்து அமைச்சர் என்பது மூன்று. எனவே இதில் ”மூன்று முகம்”  தெரிகின்றது. ஆகவே ஐ.நா.ஆணையாளரிடம் கையளித்த கடிதம் ”அரசாங்கம் கைளித்த கடிதமாக” சட்டமன்றில் வாதிடலாம். இப்படியும் எடுத்துக்கொள்ளலாம்- ”என் கையே என் கண்ணைக் குத்துவதாக”. மேலும் விரித்துரைத்தால் அரசால் வழங்கப்பட்ட அரசுக்கெதிரான குற்றப்பத்திரிகை எனவும் முத்திரை குத்தலாம்.

   பரவாயில்லை ”ஆனைக்கும் அடிசறுக்கும்” என்பதை நினைவில் வைத்து அபிவிருத்தி அரசியலையாவது முன்னெடுங்கள்.

No comments

Powered by Blogger.