அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் மன்னிப்பு கேட்டமாட்டேன், நட்டஈடும் வழங்கமாட்டேன் - ஞானசார தேரர்
வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரியுள்ளார்.
இரண்டு வார காலப்பகுதியினுள் தமக்கான நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பாக Sfm செய்தி பிரிவு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தமது அமைப்பு அமைச்சரிடம் மன்னிப்போ அல்லது நட்ட ஈடோ வழங்க போவதில்லை என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் Sfm செய்தி பிரிவு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தமது கண்காணிப்புக்கு அமைய தவறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
500 மில்லியன் நீங்கள் கேட்டால் இலங்கை நாட்டு முஸ்லிம்கள் இவனிடம் எதைக் கேட்பது? இவனது தலையைக் கழற்றித் தருமாறு கேட்டாலும் போதாது,
ReplyDelete