Header Ads



இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதல் - இலங்கைக்கு பூரணமான ஆதரவினை வழங்க வேண்டுகோள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட்  இறுதிப் போட்டியில் இலங்கை முஸ்லிம்கள் தமது தாய் நாடான இலங்கைக்கு தமது பூரணமான ஆதரவினை வழங்க வேண்டும்- பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தமது தாய் நாடான இலங்கைக்கு தமது பூரணமான ஆதரவினை வழங்க வேண்டுமென இலங்கை முஸ்லிம்களுக்கு பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆசிய கிண்ணத்துக்கான கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி சனிக்கிழமை(8.3.14)யன்று நடைபெறவுள்ளது.

இதன் போது முஸ்லிம்கள் தமது தாய் நாடான இலங்கைக்கு பரிபூரணமான ஆதரவினை வழங்க வேண்டும்.

அத்தோடு பாகிஸ்தான் அணிக்காக ஆதரவு வழங்குவது மற்றும் அந்த அணிக்கு ஆதரவாக பட்டாசுகளை கொளுத்துவது, வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவது போன்றவற்றை முற்றாக தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் வசிக்கும் நாடு இலங்கையாகும்.
நாம் நாட்டை நேசிப்பது நாட்டுக்கு ஆதரவாக நடந்து கொள்வது அவசியமாகும்.

தற்போதைய இலங்கையின் சூழல் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் மீதான பார்வை இவற்றை கருத்திற் கொண்டு இலங்கையிலுள்ள முஸ்லிம் கிரிக்கட் ரசிகர்கள் தமது முழு ஆதரவினையும் இலங்கை அணிக்கே தெரிவிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் கிரிக்கட் போட்டியில் பங்கு கொள்ளும் போது இலங்கை முஸ்லிம்; கிரிக்கட் ரசிகர்கள் நடந்து கொள்ளும் முறை பலரையும் வேதனைக்குள்ளாக்கிய சம்பவங்களையும் இங்கு நினைவு படுத்த விரும்புகின்றோம்.

இந்த நிலையில் நாளை சனிக்கிழமை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தமது தாய் நாடான இலங்கைக்கு தமது பூரணமான ஆதரவினை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கின்றோம்.

No comments

Powered by Blogger.