மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப பலப்படுத்துவதன் மூலம், சர்வதேச சக்திகளை விரட்டியடிக்கலாம் - ஹிஸ்புல்லாஹ்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
நம் நாட்டில் பலமான அரசை வைத்துக் கொண்டு எமது பிரச்சினைகளை எமக்குள்ளே பேசி தீர்க்காது அரசுக்கெதிராக ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இன்று நாம் அமையாக வாழ்ந்துகொண்டிருக்கையில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இந்த அரசை ஒருபோதும் தூக்கியெறிய முடியாது.
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்;.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில்; நடைபெற்ற தொழில்நுட்ப வளாக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் கூறினார். இங்கு பிரதியமைச்சர் தொடர்ந்து பேசுகையில்
இன்று நாம் இந்த நாட்டில் அமைதியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கையில் சர்வதேச சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் தமிழர்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு மீண்டும் இன மோதல்களையும் இன கலவரங்களையும் ஏற்படுத்த முனைகின்றன. இவ்வாறான தீய சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணிய கூடாது.
எமது நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. இந்த நாட்டில் மாத்திரமல்ல உலக நாடுகள் முழுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. அமைதியாக இருந்த ஈராக் இன்று எரிந்துகொண்டிருக்கிறது.
ஜனாதிபதி சதாம் ஹுசைன் மிகவும் அருமையான ஆட்சியை அங்கு நடத்தி வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டு அங்கு யுத்த களமாக அந்த நாடு மாறிக்கொண்டிருக்கிறது. சுமார் நாலு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் இதுவரை அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல கோடி சொத்துக்கள் அந்நிய நாடுகளால் சூரையாடப்பட்டு வருகின்றன.
சர்வதேச ரீதியில் இலாபமடையும் சக்திகள் சிரியா லிபியா மற்றும் பல நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைந்து வருகின்றன. இதனையிட்டு நாம் மிக கவனமாக இருக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப்பலப்படுத்துவதன் மூலம் இந்த சர்வதேச சக்திகளை விரட்டியடிக்க முனைய வேண்டும்.
எமது பிரச்சினைகளை நாமே தீரக்க வேண்டுமே தவிர அவ்வாறு அந்நிய சக்திகள் இன வாதத்தையும் மத மத வாதத்தையும் கிழப்பி இந்த நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்.
பல நூற்றாண்டு காலமாக சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மிகச் சந்தேசமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் மிக அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கி முஸ்லிம்களுக்கெதிராக சர்வதேச சக்திகள் இனங்களுக்கிடையில் மோதல்களை உண்டு பண்ண முனைந்து வருகின்றன இந்த நிலைமைகளை உணர்ந்து எமது மக்களை பாதுகாப்பதற்கான வழியை மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசியல் ரீதியாக அனுகி அரசியல் லாபம் தேட எவரும் முனையக்கூடாது.
ஒரு காலத்தில் நாம் இப்பிரதேசத்தில் ஒரு கூட்டம் நடத்தவும் வெளியில் நடமாடவும் நிம்மதியாக உறங்கவும் முடியாமல் இருந்த பயங்கரவாத சூழலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனை மாற்றி அமைதி சூழலை இங்கு ஏற்படுத்தியுள்ளார். அன்றைய பயங்கரமான காலகட்டத்தில் இப்பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் பள்ளிவாயல்களிலும் ஆற்றில் மீன் பிடிக்கச்சென்ற வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டு ஜனாஷாக்களை எடுக்கமுடியாதிருந்த சூழல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாற்றப்பட்டுள்ளது.
அவரால் கொண்டுவரப்பட்ட அந்த அமைதி சமாதானத்தை பொறுக்க முடியாத சக்திகள் இந்த நாட்டில் மீண்டும் அமைதி இன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டுக்குள் இருந்து குழப்பத்தை உண்டு பன்ன முடியாத சக்திகள் நாட்டுக்கு வெளியே இருந்து அமைதியை குலைக்க முயற்சிக்கின்றனர் என்றார்.
ஆம் ஐயா இறைவன் துணை கொண்டு ஜனாதிபதி அவர்கள் புலிப்பயங்கரவாதத்திலிருந்தும் அளித்த இவ்வமைதி மறக்க முடியாத ஒன்றுதான் , ஆனால் பௌத்த பயங்கரவாத்தை ஊக்குவித்து வேடிக்கை அல்லவா பார்த்துக் கொண்டிருந்தார் ,
ReplyDeleteஇப்பிரச்சனையை சுமுகமாய் தீர்க்க இவர் (ஹிஸ்புல்லாஹ்) என்னதான் செய்தார் ??
புலிகளுக்கு பல ஹிரோ ஹொண்டாக்கள் கொடுத்துதவிய இவர் பௌத்த தீவிர வாதத்துக்கு என்ன கத்தி செய்து கொடுக்கப் போகிறாரோ ?இத்தீவிரவாதம் இப்படியே போனால் உங்கள் ஈச்ச மரங்கழுக்கு முன்னால் அரச மரமும் புத்த சிலையும் வருவது உறுதி அப்போது கூட நீங்கள் .... எம்மூரை ஜனாதிபதி அழகூட்டி உள்ளார் எனச்சொல்லி அரச மரங்களுக்கு உரம் போடுவீங்க போல
நம் பிரச்சினையை நாமேதான் உள்னாட்டில் தீர்த்து வைக்கனும் என்பதில் எவருமே முரன்பட்டதில்லை,ஆனால் என்ன நடந்தது என்று தெறியாமலே நீங்கள் எல்லாம் பேசுகிறீர்கள்.
ReplyDeleteஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துறைக்கப்பட்ட நல்லினக்கத்திற்கான கற்றுக்கொண்ட பாடங்களை அமுல்படுத்துவதில் ரொம்ப அஜாக்கிரதையாக இருந்து மேலும் மேலும் பல புதிய இனப்பிரச்சினகளை துடங்கிவிட்டீர்கள்.அப்போ,உங்களை நம்பி இன்னுமா பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருப்பார்கள்?
நேசிக்கப்படக்கூடிய தலைவராக ஒரு நாட்டின் ஆட்சியாளர் இருந்தால் எந்த சக்தியாலும் எதையும் செய்து விடமுடியாது என்று வெகுமுன்னெறே நாங்களும் சொல்லியிருந்தோம்,ஆனால் அதுதான் முடியாத காரிமாயிற்றே!உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துக்கொள்ளும் மனோபாவம் அப்பாவி மக்களிடமில்லை,தவிர,உங்களைப்போன்ற அரசியல்வாதிகளிடம்தான் அவைகள் குடிகொண்டுள்ளது.
நீங்களும்,அஸ்வரும் சேர்ந்து ஆளுக்கொரு கரத்தை பிடித்து ஜனாதிபதியை பலப்படுத்துங்கள்.பார்த்து செய்யுங்கள்,உங்களின் பலத்தால் ஜனாதிபதியே பயப்படப்போகிறார்.
நேற்றுதான் தெகிவலை பள்ளிவாயல் நீதிமன்றத்தால் மூடப்பட்ட இன்னிலையிலும் தன்னை,தன் சமூகத்தை மறந்து இன்னுமின்னும் உணர்ச்சிகளற்று அறிக்கைவிடுவது உங்களுக்கே நன்றாய் இருக்கிறதா?
கொறிக்கும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல்,யாரைப்பார்த்தாலும்,இப்போ,30 வருட பயங்கவாதத்தைப்பற்றியே பேசிப்பேசி மக்களை முட்டாலக்கப்பார்க்கிறார்கள்.உண்மையை சொன்னால்,பயங்கவாதம் இருந்ததை விட,நின்மதியற்றே இந்த ஆட்சியில் மக்கள் வாழ்கிறார்கள். இதை யாரும் மறைக்கவோ,மருக்கவோ முடியாது.
இலங்கையில் எந்த இடத்திலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என்று சொன்ன இவரின் வார்த்தைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேன்டும். தலைவரின் கைகளை பலப்படுத்தினால்தான் மேலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படலாம்...... வாழ்க... ஹிஸ்புள்ளா போன்ற எமது அரசியல்வாதிகள். வாக்குப்போட்ட எமது கரங்களே உங்கள் கவனத்திற்கு.....!!
ReplyDeleteBEFORE THAT WHAT IS YOUR ACTION AGAINST THE PRINCIPAL OF RAJAGIRIYA JANATHIPATHI VIDYALAYA WHO INSULT THE MUSLIM STUDENT AND FARDHA DRESS OF MUSLIMS...??????
ReplyDeleteYOU POLITICIAL LEADERS ARE THE PRIMARY RESPONSIBLE TEAM TO TAKE ACTION AND PUSH THE GOVERNMENT AND EDUCATIONAL MINISTRY TO SUSPEND OR DISSMIS THIS INDECENT AND CRUAL MINDED PRINCIPAL.
PLEASE DON'T ABUSE YOUR RESPONSIBILITY AS YOU WILL BE ASKED FOR THIS DEFINITELY.
THIS IS YOUR TIME TO SHOW YOUR HONESTY FOR YOUR SOCIETY THE PUBLIC WHO VOTED TO YOU. WILL YOU ...??? ( BEFORE THEY DIVERT THIS CASE YOU SHOULD TAKE IT UP )