கத்தாரில் இருந்து சவூதி, ஐக்கிய அரபுக் குடியரசு, பஹ்ரைன் தூதர்கள் வாபஸ்
மேற்கத்திய சார்புக் கூட்டணியான சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபுக் குடியரசு மற்றும் ஓமன் ஆகிய அரபு நாடுகள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் என்ற அமைப்பின் கீழ் ஒன்றாகச் செயல்பட்டு வந்தன. பழமைவாத பரம்பரைக் குடியாட்சியைக் கொண்ட இந்த நாடுகளில் கத்தார் தன்னிச்சையாக எகிப்து, சிரியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் காணப்பட்ட இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வந்தது.
இந்த செயல்பாடு மற்ற உறுப்பினர் நாடுகளிடையே சந்தேகத்தையும், விரோதப் போக்கையும் வளர்த்தது. எனவே, கத்தார் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஒன்றுகூடி வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் குழுக்களுக்கோ, தனி நபர்களுக்கோ நேரடி பாதுகாப்புப் பணி அல்லது அரசியல் செல்வாக்கின்மூலம் ஆதரவு அளிக்கக்கூடாது.
மேலும், விரோதப் போக்கினை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நேற்று ரியாத்தில் கூடிய இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கத்தார் நாட்டுத் தலைமையையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், இந்த முயற்சி பலிக்கவில்லை.
எனவே தங்கள் நாடுகளின் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் காக்கும்விதமாக இன்று முதல் கத்தார் நாட்டிற்கான தங்களின் தூதர்களை திரும்பப் பெறுவதாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு, பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கை இதுவரை அந்த நாடுகளின் வரலாற்றில் இல்லாத முன்னோடியாகும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இஸ்லாமியக் குழுக்கள் என்பதை சற்று நிதானமாக படிக்கவும் காரணம் இந்த கத்தார் யெமெனில் சுன்னிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் ஹவ்சிகள் என்னும் சிறிய கூட்டத்தக்கு பல உதவிகள் செய்து வந்துள்ளது மற்றும் பக்கத்து நாடுகளில் தாக்குதல்களில் ஈடுபடும் சில இயக்கங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உதவி வந்துள்ளது கத்தார் இஹ்வான் சார்புள்ள நாடு எகிப்தில் இஹ்வான்களுக்கு பல விதத்தில் உதவி செய்துள்ளது
ReplyDeleteமேலும் சில தினங்களுக்கு முன் சவ்தி இளவரசர் பல நாடுகளுக்கு இரஜதந்திர விஜயத்தை மேற்கொண்டார் அதில் முக்கியமாக பாகிஸ்தானுடன் பல இராணுவ ஒப்பந்தங்களை மேற்கொண்டார் இதன் பிரயேசனம் பிராந்தியத்தை பற்றி அறிந்தவர்கள் மற்றும் ஈரானின் தலையீடு பற்றி அறிந்தவர்கள் விங்கிக் கொள்வார்கள் இக்கூட்டை உடைப்பதற்காக கட்டாரின் முக்கியமான ஒருவர் பாகிஸ்தான் சென்று சவ்தியுடன் உள்ள உரவுக்கு வேட்டு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்ன துரகோம்
தற்போதய அமீர் ஏற்கனவே மன்னர் அப்துல்லாஹ்விடம் எழுத்து மூலமாக இதன் பின் தனது நாடு வளைகுடா நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டாது என ஒப்புதல் கொடுத்தார் என்றாலும் அவரது தந்தை இதை கடுமையாக எதிர்த்தார்
மேலும் இக்கட்டுரையில்; மேற்கத்கத்திய சார்பு கூட்டணி என கூறியவர் ஈரானை இவ்வாறு கூறுவார்களா?
யாரையாவது பிரதிநிதிகளை அனுப்பி ஏதாவது செய்யுங்கள் ஐயா.வருசந்தோறும் கிடைக்கிற பேரிச்சம்பழத்துக்கு ஆப்பு விழுந்திடும்
ReplyDelete