பாராளுமன்றத்தை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை சொன்ன அமைச்சர்
(Gtn) பாராளுமன்றத்தை ஹம்பாந்தோட்டைக்கு மாற்ற வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் சகலவிதமான உட்கட்டுமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றம் ஒன்று மட்டுமே குறையாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பல்வேறு வசதிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பண்டைய மன்னர்களும் ஆட்சி மையத்தை மாற்றி ஆட்சி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, கண்டி போன்றன இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி நடாத்தும் நகரங்களில் மாற்றம் செய்வதன் மூலம் அந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் சில காலங்களுக்கு பாராளுமன்றம் இயங்கினால் அந்தப் பிரதேசம் மேலும் அபிவிருத்தி அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றை ஹம்பாந்தோட்டைக்கு நகர்த்துமாறு தாம் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகப் பற்றற்ற ரீதியிலும் கோரியதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தக் கோரிக்கை நடைமுறைச் சாத்தியமற்றது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை மட்டும் இடம் நகர்த்தவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகலவிதமான நிர்வாக நடவடிக்கைகளும் கொழும்பை மையப்படுத்தி இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
iwarukku awashara shihishshey alikka weyndum. illawittal moolai mulumayyaaha kettu widum.
ReplyDelete