Header Ads



மணவர்களின் களப் பயணம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 2010 ஆம் ஆண்டு  முன்னாள் அதிபர் திருமதி மர்ஜுனா ஏ காதர் அவர்களினால் பரீட்சாத்தமாக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள் 100 பேர் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில்  பரீட்சைக்கு முதன்  முதலாக தோற்றவுள்ளனர்.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் வழிகாட்டலில் பகுதித் தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் தலைமையில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் ஆசிரிய ஆசிரியைகளுடன் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியிலுள்ள பெண்கள் சந்தைக்கு களப் பயணம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்.

மாணவ மாணவிகள் மிகவும் உட்சாகமாக சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுடன் பொருட்களின் விலை சம்பந்தமாக சுதந்திரமாக உரையாடியதுடன் தமக்கு விருப்பமான பொருட்களையும் கொள்வனவு செய்தனர்.

அத்துடன் மீன் வியாபாரிகள் கடலில் மிகவும் அரிதாக காணப்படும் பல்வேறு வகையான மீன்களை இம் மாணவர்களுக்கு காண்பித்ததுடன் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டனர்.

மாணவர்கள் தமக்கு தேவையான விபரங்களை அப்பியாசப் புத்தகங்களில் குறித்துக் கொண்டனர். இவ்வாற முயற்சியினை அப்பிரதேச மக்கள் பெரிதும் பாராட்டியதுடன் இம் மாணவர்களை மிகவும் அன்பாக உபசரித்ததனையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.





No comments

Powered by Blogger.