Header Ads



'மக்களின் நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்' றிசாத் பதியுதீன்

(ஏ.எஸ்.எம்.இர்ஸாத்)

மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு ஓர் ஆசனத்தைப் பெற்ற நமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஸாத் பதியுதீன் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்,

தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- வடக்கு கிழக்கிற்கு வெளியே முதற்தடவையாக தனித்து எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் களம் இறங்கியபோது கொழும்பு மாவட்டத்தில் ஓர் அங்கத்தவரேனும் எமது கட்சிக்கு,இருந்திருக்கவில்லை.

மிகக்குறுகிய காலத்தில் நாம் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறியே பிரசாரத்தில் ஈடுபட்டோம். இந்த வெற்றியானது மக்கள் எம்மை அங்கீகரித்துள்ளதென்பதையே புலப்படுத்துகின்றது. தேசிய ரீதியில் நாம் பணியாற்றுவதற்கு கொழும்பு மாவட்ட மக்களாகிய நீங்கள் தற்போது வழி ஏற்படுத்தி தந்திருக்கின்றீர்கள்.

நாம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் ஆறு மாகாண சபைஉறுப்பினர்களையும் உள்ள10ராட்சி சபைகளில் நான்கு தலைவர்களையும், 61உள்ள10ராட்சி சபைகளில் பிரதிநிதிகளையும் பெற்றிருந்தபோதும் கொழும்பில்கிடைத்த இந்த ஒர் ஆசனம் தேசிய ரீதியில் எமக்கு கிடைக்கப்பெற்றஅங்கீகாரமாகவே கருதுகிறோம்.

எம்மை நம்பி வாக்களித்த கொழும்பு மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. எமது கட்சி மூவின மக்களையும் அரவணைத்து தொடர்ந்து பணியாற்றும் என நான் உறுதியளிக்கின்றேன். அத்துடன் எங்கள் கட்சிமீது நீங்கள் வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாக தெரிவிக்கின்றேன்.

No comments

Powered by Blogger.