Header Ads



இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்..?


(நஜீப் பின் கபூர்)

எதிர் காலத்தில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் திட்டவட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதாரவை மஹிந்த ராஜபக்சாவுக்கு வழங்கும், இப்படிப் ஏறாவூர் எக்ஸ்பிரஸ் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசி இருக்கின்றார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர். 

இதற்கு முன்னர் இப்படியான பொறுப்பான அறிவிப்பை கட்சித் தலைவர் செய்வது தான் வழக்கம். அதுவும் பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின் கடைசி நேரத்தில்! என்றாலும் அமைச்சர் எக்ஸ்பிரஸ் கல்லூரி வைபவத்தில் வைத்துப் பேசியதனால் வார்த்தைகளை அதே வேகத்தில் வெளியே தள்ளிவிட்டாரோ என்னவோ தெரியாது? 

இது கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பா என்பதனையும் நாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடத்தில் கேட்கவிரும்புகின்றோம். தலைவர் அஸ்ரஃப் காலத்தில் இது போன்ற அறிவிப்புக்களை அவர் அவ்வளவு விரைவாக வெயிடுவதுமில்லை. ஆனால் கட்சியில் புதுச் சம்பிரதாயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவே மு.கா. தொண்டர்கள் இதனை நிச்சயம் பார்ப்பார்கள். மு.கா.காரர்கள் அப்படிப் பார்க்கின்றார்களோ என்னவோ இந்த அறிவிப்புத் தொடர்பாக சில கேள்விகளை மு.கா.விடம் சமூகத்தின் பேரால் கேட்ட வேண்டும் போல் தோன்றுகின்றது.

1.கொழும்பில் நடைபெருகின்ற இனச்சுத்திகரிப்பு-முஸ்லிம் குடிமனைகள் தகர்ப்புத் தொடர்பாக அங்கு சென்று பார்த்தபோது (ஜாவாலேன்) தனக்கு வயிறு பற்றி எறிந்தது என்று பேசி  இருக்கின்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம். இப்படி அமைச்சின் ஊடகச் செயலாளர் (அவர் சகோதரர் ஹபிஸ் செய்தி கொடுத்திருக்கின்றார்) நீங்கள் சொல்லுகின்ற இந்த இனச் சுத்திகரிப்பை செய்கின்றவர்கள் யார்?

2.சமூகத்திற்காக  பேரம் பேசுகின்ற சக்தியைப் பெற்றுக் கொள்ள எங்களுக்கு வாக்குத்தாருங்கள் என்று கேட்கும் பொறுப்பு வாய்ந்த கட்சி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்த அறிவிப்பை முன் கூட்டிச் செய்வதற்கு ஏற்பட்ட தேவை என்ன?

3.கட்சி இந்த அறிவித்தலை உத்தியோகபூர்வமானது என்று அங்கிகரிக்கின்றதா?

4.கட்சியில் அரசியல் உயர் பீடம், செயற்குழு என்பன இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்கின்றதா? 

5.தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்பிடமிருந்து  பதவியை பிடுங்கி எடுப்பதற்கு ஹாபிஸ் நசீர் ஜனாதிபதிக்குக் கொடுக்கின்ற ஆசை வார்த்தையாகவும் இதனை மக்கள் எடுத்துக் கொள்ளலாமா?

6.வருகின்ற தேர்தலில் பேரம் பேசாமல்  போய்ச் சராணாகதியடைந்து விடலாம் என்ற திட்டமோ இது?

7.மாகாண சபைத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் செய்யப்பட்டிருக்கின்ற அறிவிப்பு கட்சிக்குக் கிடைக்கின்ற வாக்கை பாதிக்கச் செய்யாதா. முஸ்லிம்களின் உரிமைகள் பெற்றுத்தர வாக்குக் கேட்கின்ற நேரம் அல்லவா இது ..!?

8.சில தினங்களுக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம் என்று தலைவர் ரவூப் ஹக்கீம் பேசும்போது   ஹபீஸ் நஸீpன் முன்கூட்டிய இந்த அறிவிப்பு அதற்கு முரனாகத் தெரியவில்லையா? 

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்? மௌத்தால் சமாளித்தலா  பொருத்திருந்து பார்ப்போம்.! வருமா பதில்...!     

No comments

Powered by Blogger.