கொழும்பில் வீதியில் கிரிக்கெட் விளையாடியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்
(Tm) கொழும்பு-02 கொம்பனி தெரு, கீயூ வீதியில் வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை கிரிகெட் விளையாடிய மூன்று இளைஞர்களை கொம்பனி தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மூவரையும் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் பொலிஸார் நேற்று ஆஜர்படுத்திய போது அவர்களை எச்சரித்து நீதவான் விடுதலை செய்தார்.
இவ்வாறான குற்றத்திற்கு தண்டனை சட்டத்தின் கீழ் ரூ.5000 தண்டப்பணமும் இதே தவறை மீண்டும் செய்தால் ரூ.50,000 தண்டப்பணமும் அறவிடலாம் என்று நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிப்பது நல்லமில்லைதான். பொது பல சேனா, சிங்கள ராவய போன்றோரின் ஆர்பாட்டம் அட்டகாசம் எல்லாம் தடை செய்ய மாட்டாங்களே. அதுக்கு மாற்றமாக பள்ளி வாசல்களை மூட்றான்களே. இது தான் மகிந்த சிந்தனையோ.
ReplyDelete