Header Ads



மாமிசம் உண்­ப­வர்களுக்கு மிருக உயிர்­களின் வலியும், உயர்வும் தெரி­யாது - ஞான­சார தேரர்


எவ­ருக்கும் ஐந்து சத­மேனும் நஷ்ட ஈடாக வழங்கப்போவதும் இல்லை. நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகப் போவ­து­மில்­லை­யென பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். வனங்­களை அழித்து மனி­தர்­க­ளையும், மிரு­கங்­க­ளையும் பலி­யாக்க எவ­ருக்­குமே இட­ம­ளிக்க மாட்­டோ­மென்றும் தேரர் தெரி­வித்தார்.

தனது பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் விதத்தில் பொது­பல சேனா பொதுச் செய­லாளர் கலகொட அத்தே ஞான­சார தேரர் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார் என்றும் எனவே, தேரர் மன்­னிப்பு கேட்க வேண்டும் இல்­லா­விட்டால் 500மில்­லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப் போவ­தா­கவும் அதற்­கான சட்­டத்­த­ரணி ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக கேட்டபோதே கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தேரர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,.

யுத்­தத்தால் முஸ்­லிம்கள் மட்­டு­மல்ல தமிழர்கள், சிங்­க­ள­வர்கள் என அனைத்து இனத்­த­வர்­களும் இடம்­பெ­யர்ந்­தனர். அவ்­வாறு இடம் பெயர்ந்த மக்­களை வடக்கில் அவர்கள் வாழ்ந்த இடங்­க­ளி­லேயே மீள் குடி­யேற்ற வேண்டும். அதை­வி­டுத்து தேசிய ரீதி­யாக பாது­காக்­கப்­படும் வில்­வத்து உட்­பட வனாந்­த­ரங்­களை அழித்து முஸ்லிம் மக்­களை மீள் குடி­யேற்ற இட­ம­ளிக்க முடி­யாது. இவ்­வாறு வனாந்­த­ரங்­களை அழித் ததன் கார­ண­மா­கவே இன்று இலங்­கையின் கால­நிலை மாற்­ற­ம­டைந்து உஷ்­ணமான­ கால­நிலை நிலவுகிறது. இதனால் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டதோடு மட்­டு­மல்­லாது மனி­தர்­களும், மிரு­கங்­களும் அழியும் நிலை தோன்­றி­யுள்­ளது.

இவ்­வாறு குடி­யேற்­றங்­களை மேற்­கொள்வோர் மாமிசம் உண்­ப­வர்கள். அவர்­க­ளுக்கு மிருக உயிர்­களின் வலி, உயர்வு தெரி­யாது. இயற்கை சூழலின் சுகா­தா­ரத்­தன்மை தெரி­யாது. எனவே, வனாந்­த­ரங்­களை அழிக்க எந்தக் கொம்­ப­னுக்கும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அதே­வேளை, எவ­ருக்கும் ஐந்து சதத்­தை­யேனும் நஷ்ட ஈடாக வழங்கப் போவதும் இல்லை.நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதுமில்லை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

2 comments:

  1. Nee nashamaap po kalla naaye....

    ReplyDelete
  2. அமைச்சர் ரிநாத் பதியுத்தீனு; அவர்களே! இந்த நாயை எப்படியாவது நீதிமன்றத்துக்கு கொண்டு வாருங்கள். ஒரு வாரமாவது கம்பி எண்ண வைக்க முடிந்தால் பெரிய விடயம். உங்கள் வாதத்தை பின் வாங்காமல் முன்னெடுத்துச் செல்லுங்கள். ஆனாலும் அரசியல் தலையீடுகள் வரும் என்றும், வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிலை வரும் என்றும் கருதினால்,,,,,,,
    இந்த நாய் ஏதோ நாட்டின் பொறுப்பாளியொன்று மாதிரியல்லவா குறைக்கின்றது. அல்லாஹ்வின் அழிவு இவனுக்கு அவசரமாகக் கிடைக்கட்டும். அடோ, லொகு பல்லோ

    ReplyDelete

Powered by Blogger.