பஹ்ரைனில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையரை தேடும் இன்டர்போல்
பஹ்ரைனில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இன்டர்போல் காவற்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பஹ்ரைன் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பஹ்ரைனில் உள்ள சுற்றுலா நிலையம் ஒன்றில் பணியாற்றிய 28 வயதான இலங்கையர் ஒருவர், அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்லாயிரக் கணக்கான டினார்களை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் தமது ஒப்பந்த காலம் நிறைவடைந்து நாடு திரும்பிய பின்னரே இது தொடர்பான முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை தேடும் பணிகள் இன்டர்போலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் இணைப்பு-
பஹ்ரைன் மக்களிடம் ஆயிரக்கணக்கான டினார் ஏமாற்றியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவரை சர்வதேச பொலிஸார் தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
28 வயதான குறித்த நபர், விசா சேவைகள் மற்றும் விமான டிக்கெட்டுக்களை வழங்கும் நிறுவனமொன்றில் பணியாற்றியுள்ளார். இதன்போது, நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளரான முஹம்மது சலே, குறித்த நபரைப் பற்றி அறிந்து கொண்ட பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நபர் அலுவலகத்திற்கு வெளியே வைத்திருந்த வணிக தொடர்புகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தருமாறு தன்னிடம் கோரியதாக அவர் தெரிவித்தார்.
நிறுவன உரிமையாளராக முஹம்மது சலே மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பாக விசாரணை செய்ய பஹ்ரைன் அதிகாரிகள் சர்வதேச பொலிஸாரிடம் உதவி கோரியுள்ளனர்.
முகவர் ஊடாக குறித்த நபரின் விலாசத்திற்கு எனது வேலையாட்களை இலங்கைக்கு அனுப்பினேன். ஆனால், அவர் அங்கு இல்லை. அதனால் எனக்கு வேறு வழியில்லை. பஹ்ரைன் பொலிஸ் மூலம் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளோம்.
இந்த நபரால் நான் மிகவும் கஸ்டப்பட்டுவிட்டேன். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவரை வைக்க வேண்டும்.
அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக யாரோ என்னிடம் கூறினர். ஆனால் அது உறுதியாகவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது.
மக்களுடைய வார்த்தைகளை கவனத்தில் எடுக்க முடியாது. அதனை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அவன் எங்கே போனான் என்று யாருக்கும் தெரியாது, இலங்கை அல்லது டுபாய். இல்லாவிட்டால் வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றார்.
குறித்த நபர் கடந்த ஜனவரி 21 ம் திகதி பஹ்ரைனை விட்டு வெளியெறியுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் 9 மாதங்கள் வரை இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். ஆனால் நிறுவனத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களைச் சந்தித்து, பணத்தை வாங்கி போலியான ரசீதுகளை வழங்கியுள்ளார்.
அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவது உறுதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment