கைதிகளுக்கு "ஹலால்' உணவு - பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு
பிரான்ஸ் நாட்டு சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு, "ஹலால்' உணவு வழங்க, அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு, சிறைகளில், கைதிகளுக்கு சைவ உணவு அல்லது பன்றி இறைச்சியுடன் கூடிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம் கைதிகள், தங்கள் மத சம்பிரதாயத்துக்கு எதிரான, பன்றி இறைச்சியை மறுத்ததால், சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய, "ஹலால்' உணவை வழங்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு ஒப்புக் கொண்டது.
"முஸ்லிம் கைதிகளுக்கு ஹலால் உணவு வழங்க வேண்டும் என்றால், தனியாக சமையல்காரர்களை நியமிக்க வேண்டியிருக்கும்' என, சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஹலால் உணவு வழங்கக் கோரி, முஸ்லிம் கைதிகள் வழக்கு தொடர்ந்தனர். வெளியில் இருந்து, ஹலால் உணவை வாங்கிக் கொள்ளலாம் என்று, அரசு தரப்பில் கூறியதை அடுத்து, முஸ்லிம் கைதிகளுக்கு,, ஹலால் உணவு வழங்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment