Header Ads



''நம்மட ஆக்களே, நம்மட ஆக்களை குர்பான் கொடுத்துவிட்டார்கள்''


(முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய சகோதரர் ரவூப் ஹஸீர், தன்னுடைய பேஸ்புக்கில் பின்னூட்டம் பதிவிட்டிருக்கிறார். அந்த பின்னூட்டம் இவ்வாறு அமைகிறது..!

இம்முறையும் தென் மாகாண சபையில் ஒரு முஸ்லீமாவது தெரிவாகவில்லயாம்.

மாத்தறை முஸ்லீம்களில் பெரும்பாலானோர் இம்முறை ஜே வீ பீ க்கு ஆதரவளித்தார்கள். அவ்வாறு முஸ்லீம் வாக்குகளை அள்ளிக்கொடுப்பதற்கு நல்லாட்சிக்கான ( காத்தான்குடி ) இயக்கம் மற்றும் சகோதரர் நஜா முஹம்மத் (முன்னாள் ஜமா அத்தே இஸ்லாமி அரசியல் பிரிவின் தலைவர்) குழுவினர் என்பன மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாக அறிகிறோம். 

அதேவேளை மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் கடுமையாக உழைத்த மு.கா , தென் மாகாணத்தில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லை.

சுமார் 22 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களைக்கொண்ட மாத்தறை மாவட்ட முஸ்லீம்கள் 9௦௦௦ வாக்குகளை மு கா விற்கு அளித்திருந்தால் ஒரு முஸ்லிம் உறுப்பினரை பெற்றிருக்க முடியும். இதனைக் குறிப்பிட்டு மு கா தனியாக போஸ்டர்கள் ஒட்டியும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் மக்களை அறிவுறுத்தி இருந்தது.

கடைசியில் நம்மட ஆக்களே நம்மட ஆக்களை குர்பான் கொடுத்துவிட்டார்கள்.

வடமாகாணத்தில் அஸ்மினுக்கு ஒரு ஆசனத்தை விலைக்கு வாங்கியதுபோல ( முஸ்லீம் வாக்குகளுக்கான பண்டமாற்றம் ) இவர்களால் ஜே வீ பீ இடமும் ஒன்று பெற்றுக்கொள்ள முடியுமாயின் பாராட்டுவோம்...!!

7 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸ் உங்கள் சகோதரரின் தலைமைத்துவத்தின் கீழ் வந்த பிறகு ஒட்டு மொத்த சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தையுமே அடகு வைத்துவிட்டது உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா? தவறை யார் செய்தாலும் தவறு என்று கூறும் உளப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் சகோதரரே?

    ReplyDelete
  2. ப்ராதர்! தெரியாமதான் கேக்கிறன் அடகு வைக்கிறதுக்கு முஸ்லிம் சமூகம் என்ன தங்கமா அல்லது வைரமா? சரி அப்புடித்தான் வச்சாலும் எந்த மடையன் இந்த சோனவனுகளுக்காக காசு கொடுப்பான்? ப்ராதர் சிரிலங்கால முஸ்லிம்களுக்காக இருப்பது ஒரே கட்சிதான் அது முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான், அதை வளர்த்தெடுப்பதும் நேர் வழிப்படுத்துவதும் உங்கள்கையில்தான் இருக்கிறது.....அத விட்டுவிட்டு சும்மா...தலைவர் அடகு வச்சுட்டாரு.....வட்டி கட்ராரு, நாளைக்கு வித்துபோடுவாரு அப்புடின்னு பொலம்பிக்கொன்டு இருக்காமல், போய் ஆக வேன்டிய வேலைய பாருங்க ப்ரோ ......

    ReplyDelete
  3. இஸ்லாம் கூரும் அரசியல் பன்புகளை J V P யிடம் பிச்சை வாங்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. Nengal ungaludaiya Porupuhalai avaravar sariyaha saiyum vidaththu nam en ungalai kuraban koduppom attaiyoo allathu mattaiyo than kuduppoom, ungalai alla.
    Athai sariya saiya mudiya vittal vera ethum ungaluku poruthamana velai edum parkalame..

    ReplyDelete
  5. தேர்தலில் மட்டும் விழித்தெழுபவர்களுக்கு இது மக்கள் கொடுத்த பதிலடிதான்.... எப்படியோ 'திருத்த முடியாத கழுதைகள்' தான்... எதிர்காலத்திலும்.... அதை சில நாட்களின் நாம் தெரிந்து கொள்வோம்....!!

    ReplyDelete
  6. ஆலும் கட்சியுடன் ஒட்டி முஸ்லிம்கலிடம் ஓட்டு கேட்ட நம்ம ஆலுங்க மண்னை கவ்வி தண்ணீர் குடித்து வீட்டில் படுக்ரார்கலாமே உன்மையா என்ன செய்வது மூஞ்சகழுவிட்டு தொழுது பாவமன்னிப்பு கேட்பதுதான் கடைசி வழி

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ்! முஸ்லிம்கள் சொரணையுள்ளவர்கள்தான் என்பதை முஸ்லிம் காங்கிறஸை ஓரம் கட்டியதிலிருந்து உணர்த்தியிருக்கிறார்கள். கிழக்கின் சகோதர முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இணைச் செய்வார்கள் என்று நம்பலாம்.. நம்மட ஆக்களே நம்மட ஆக்களைக் குர்பான் கொடுக்கவில்லை, முஸ்லிம்களை பால் கொடுக்கும் ஆக்களாக்க் காட்டி அரசுக்கு குர்பான் கொடுக்க எத்தனித்த மு.கா.வை முஸ்லிம்கள் குர்பான் கொடுத்து விட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.