Header Ads



கொழும்பு மேயர் எச்சரிக்கப்பட்டார்..?

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அந்த கட்சியின் தலைமைத்துவச் சபை, கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸ்ஸாமிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் முஸ்ஸாமிலை அழைத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பகிரங்கமாக கூட்டங்களில் கட்சிக்கு எதிராக கருத்து வெளியிடுவதையும் கட்சியின் உள்விவகாரங்களையும் பேசுவதை உடனடியாக நிறுத்துமாறும் தொடர்ந்தும் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத்துவச் சபையினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இனிவரும் காலங்களில் தான் பகிரங்க கூட்டங்களில் அவ்வாறான கருத்துக்களை வெளியிட போவதில்லை என முஸ்ஸாமில் உறுதியளித்துள்ளார்.

அரசியலுக்கு புதியவரான தனது மனைவியை சூழவுள்ள மக்கள் சக்திகளை கண்டு கட்சியில் உள்ள சிலர் அஞ்சுவதாகவும் சிலரின் தேவைகளுக்கு அமைய தீர்மானங்களை எடுக்கும் செயற்குழுவில் பெயரளவில் மட்டும் இருப்பதால் எந்த பயனுமில்லை எனவும் முஸ்ஸாமில் தெரிவித்திருந்தார்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா? என்பது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.