Header Ads



பேஸ்புக் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதம் தேவை - அமைச்சர் ஏக்கநாயக்க

(Nf) பேஸ்புக் சமூக இணையத்தளம் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதமொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக கலாசார மற்றும் கலை விவகாரங்கள் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதற்குப் பொருத்தமான காலம் தற்போது உருவாகியிருப்பதாக அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பேஸ்புக் தொடர்பில் விதிமுறைகளை ஏற்படுத்துவதோ அல்லது தடை விதிப்பதோ தனது நோக்கமல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏக்கநாயக்க தெரிவித்த கருத்து :-

“இதுகுறித்து மக்களின் கருத்தறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாக இருக்கின்றது. இது பற்றிய தேசிய விவாதத்தின்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படும்போது அதற்கான தீர்விற்கு செல்ல முடியும். இதில் அரசாங்கம் தலையிட முடியாது. எனவே தேசிய ரீதியாக மக்களிடமும், பல்லின அமைப்புகளிடமும் அதுகுறித்து விவாதமொன்றை ஏற்படுத்தும்போது, அதன் இறுதி முடிவாக இலங்கைக்கு பொருந்தக்கூடிய வழிமுறையை அமுல்படுத்துவதற்கான காரணிகளை முன்வைப்பதற்குரிய வாய்ப்பை கட்டியெழுப்ப முடியும்.”

No comments

Powered by Blogger.