Header Ads



பௌத்தர்களை போல ஏனையவர்களும் சுதந்திரமாக மத அனுஸ்ட்டானங்களில் ஈடுபடும் சூழ்நிலை - மஹிந்த பெருமிதம்

இலங்கையில் அனைத்து மதங்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்தர்களை போலவே ஏனைய மதங்களை சேர்ந்தவர்களும் சுதந்திரமாக தங்களின் மத அனுஸ்ட்டானங்களில் ஈடுபடும் சூழ்நிலையை அரசாங்கமே உருவாக்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் சிலத் தரப்பினர் இந்த விடயத்தில் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில மதங்களுக்கு எதிராக தேடிதேடி தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் எதனையும் கூறாத இவ்வாறானவர்கள், தற்போது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். 

2 comments:

  1. i think he is Short-term memory patient

    ReplyDelete
  2. ஒரு நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதி ஆக இருக்கும் ஒருவர்... அனைத்து இன மக்களுக்கும் இந்த நாட்டின் சட்டம், நீதி, நியாயம், உரிமை சமமாக கிடைப்பதை உறுதிப்படுத்தக் கூடிய கடமையில் இருப்பவர் இப்படி பேசுவது மிகவும் கவலைக்குரிய விடயமும் இவர் இந்த பதவிக்கு தகுதியும் ஆற்றலும் உடையவரா என்பதை சகல மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

    இந்த மனிசன் தொடர்ந்து செந்தில், கவுண்டமணியிடம் வாழைப்பழம் கூறுவதை போல் கூறிக் கொண்டே இருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.