Header Ads



மாட்டு நோய் (கால்வாய்) வேகமாக பரவுகிறது..!


கடினமான கால் குழம்புகளை கொண்ட மிருகங்களுக்கு 'கால்வாய்' நோய் தீவிரமாக பரவுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நோய் கறவை பசுக்களுக்கு ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் இருந்து பசுக்களையும், மாட்டிறைச்சி என்பனவற்றை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, அனுராதபுரம், புத்தளம், திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த தடை உத்தரவு அமுலில் உள்ளது.

பசுக்கள் மற்றும் பன்றிகளுக்கு இந்த நோய் தீவிரமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது.

இலங்கையில் உள்ள 15 லட்சம் மாடுகளில், 5 ஆயிரத்து 600 விலங்குகளுக்கு இந்த நோய் தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை அமுல்படுத்தி இந்த கால்வாய் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், பொதுமக்கள் அதிக சிரத்தை கொள்ளாததன் காரணமாக நோய் பரவுதல் துரிதமடைந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குமார டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்த வாரம் 30 ஆயிரம் ஊசி மருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர சபை உள்ளிட்ட 10 மாவட்டங்களின் 30 சுகாதார தொகுதிகளில் மீண்டும் டெங்கு நோய் தொற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.