மலேசிய விமானத்தின் மர்மங்கள் தொடருகின்றன..!
மலேசிய விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் விமானத்தின் பாகங்கள் அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் பல நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாக மலேசிய பிரதமர் 25ம் திகதி அறிவித்தார்,
இதனைத் தொடர்ந்து விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இதுவரை தேடி வந்த இடத்தில் இருந்து வடகிழக்கே 700 மைல் தொலைவில் உள்ள இடத்தில் தற்போது தேடல் பணி நடந்து வந்தது
இத்தேடுதல் பணியில் சீனா மற்றும் அவுஸ்திரேலியா விமானப்படை விமானங்கள் கடலில் பல பொருட்கள் மிதப்பதை கண்டறிந்தனர்
இவற்றை கைப்பற்றி எடுத்து பார்த்ததில் அவை விமானத்தின் பாகங்களும் இல்லை என்றும் அதில் இருந்து விழுந்த பொருட்களும் இல்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் விமானத்தை தேடும் இடத்தில் மீனவர்கள் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருட்கள் கூட மிதக்கலாம் என்பதால் மிதக்கும் பொருட்களை வைத்து ஒரு முடிவுக்கு வர இயலாது என அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment