வேறு நாடுகளுக்கு பெண்கள் செல்வதை தடுக்கும் நோக்கில் தையல் தொழிற்சாலை காத்தான்குடியில் ஆரம்பம்
(டீன் பைரூஸ்)
புதிய காத்தான்குடி கர்பலா வீதியில் அமைந்துள்ள (RGF) றிப்கா தையல் தொழிற்சாலை (28.03.2014 வெள்ளிக்கிழமை) காலை 07.30 மணிக்கு சங்கைக்குறிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல்லா(றஹ்மானி)அவர்களினால் உத்தியபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வின் உரையாற்றிய றிப்கா தையல் தொழிற்சாலையின் பணிப்பாளர் அல்ஹாஜ் பீ.எம்.முகம்மது சஹாப்தீன் வறுமையை ஒழித்திட வேறு நாடுகளுக்கு அடிமைத் தொழிலுக்காக செல்வதை தடுத்திட,உழைக்கும் கரங்களுக்கு உதவிடும் எங்கள் கண்ணி முயற்சியே இதுவாகும்.
எமது தொழிற்காலையில் இலவசமாக பயிற்சிகளை முடித்தக் கொண்ட சுமார்150 பெண்கள் உள்ளனர்.அவர்களுக்கான சாற்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்றினையும் நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
எமது தயாரிப்புக்களின் விற்பனை வீதம் அதிகரிக்கப்படுகின்ற போது மேலும் கஷ்டமான பல யுவதிகளுக்கு இங்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தோழிற்சாலை தொடர்பான விடயங்களில் பங்கேற்க முஸ்லிம்,சிங்கள அதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். காத்தான்குடியில் பல உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்ற நிலையில் முதல்தடவையாக பல வகையான கைபெனியங்களை உற்பத்தி செய்யும் தொழற்சாலை ஒன்று திறங்கப்படுவதானது சிட்டிஒப் காத்தான்குடியின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அல்ஹம்துலில்லாஹ்! அழ்ழாஹ் இதன் உரிமையாளருக்கும், இங்கு கடமையாற்றும் சகோதரிகளுக்கும் அருள்பாலிப்பானாக!
ReplyDeleteநமது சமூகத்திலுள்ள தனவந்தர்கள் 100 வீதமும் தங்களுடைய இலாபத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் நம்மத்தியிலுள்ள ஏழைப் பெண்களின் நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இவ்வாறான தொழில் முயற்சிகளை ஸ்தாபிக்க முன்வந்தால் மிகச் சீக்கிரமாகவே நமது சமூகத்தில் நிலவும் வறுமை அழ்ழாஹ்வின் அருளால் இல்லாதொழியும் என்பது திண்ணம்!
-புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteதலைவலிக்கு தலையனையை மாற்றி பயனில்லை முதலில் சீதனத்தை ஒலியுங்கள் பிரச்சினை என்று வரும்போது முதலில் குர் ஆன் சுன்னாவில் தீர்வு தேடுங்கள். {பனிப்பெண்கள் பலர்தன் உடலையும் விற்கிரார்கள்}.
இம்தியாஸ் சொன்ன கருத்துதான் மிக பொருத்தம்.வீட்டில் சும்மா இருந்து கொண்டு சாப்பிடவேண்டிய பெண்கள் வெளினாடு செல்ல காரணம்,சீதனக்கொடுமையே.எத்தனை அமைப்புக்கள் வந்தாலும் திருந்தகூடியவர்கள் மிக சொற்பமானவர்களே.றிஸானா நபீக்கின் பாடமும் அதனால் வந்த படிப்பினைகளும் உரோசங்களும் இன்னும் நம்மவரை திருத்தவில்லை.
ReplyDeleteபிரச்சினையை சரியாக அடயாளம் காணாமல் என்னதான் பரிகாரம் செய்தாலும்,அவை தீரப்போவதில்லை.மேலும் சொல்லுவதன்றால்,தலைவலிக்கு,வயிற்றுவலிக்கான மருந்தை கொடுப்பதுபோலாகும்.
காத்தாங்குடியைப்பொருத்தவரைக்கும்,அங்கு ஆண்களைவிட பெண்பிள்ளைகள் பாடசாலை பருவத்திலேயே மவ்லவியா கற்கையையும் முடித்து வெளியாகின்றனர்.ஆனால்,சீதனம் கொடுக்கும் படலத்தில் கண்கூசாமல்,நா கூசாமல்,ஓதியதெல்லாவற்றையும் மறந்து முதுகெலும்பில்லாத மாப்பிள்ளையை இந்த மவ்லவியாக்களும் சேர்ந்தே எடுக்கின்றனர்.
தொழுவது, நோன்பு வைப்பது எல்லாம் நம்மவர்களுக்கு இனிக்கும். அதையெல்லாம் மாய்ந்து மாய்ந்தது செய்து கொள்ளுவார்கள். ஏனென்றால் அதில் பணம் பையைவிட்டுப் போவதில்லையே. ஆனால் சகாத் கொடுப்பது, இஸ்லாம் கூறிய வழியில் வியாபாரம் புரிவது என்றால் மட்டும் கசக்கும். அதுபோலத்தான் மகர் மட்டும் கொடுத்துப் பெண் எடுத்துக்கொண்டு திருமணம் செய்ய வேண்டிய ஆண்கள், பொன்னையர்கள் போல உம்மாமாரையும் சகோதரிகளையும் பெண்வீட்டுக்கு அனுப்பி 'உங்கள் மகளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்' என்று மறைமுக நிர்ப்பந்தங்கள் மூலம் சீதனம் பெற்றுக் கொள்கின்றார்கள்.
ReplyDeleteBy the way, பெண்களைப் பெற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பெண்களுக்கு ஒருபோதும் பெண்களைக் கட்டிக் கொடுக்காதீர்கள்!
உண்மையான ஆண்களாகப் பார்த்து கட்டிக்கொடுங்கள்!