இலங்கையிலிருந்து இந்தியா ஊடாக, சவூதி அரேபியாவுக்கு பெண்களை கடத்தும் நடவடிக்கை
சுற்றுலா வீசாவை பயன்படுத்தி இந்தியா ஊடாக சவூதி அரேபியாவிற்கு பெண்களை கடத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் நாடு திரும்பிய மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், பெண் தொழிலாளர்களின் கடத்தல் சம்பவங்கள் அறியக்கிடைத்துள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள் ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக நாடு கடத்தப்படும் பெண்கள், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை வெளிநாட்டிற்கு கடத்தும் போது அவர்களுக்கு இரண்டு கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்களினூடாக பாரியளவிலான பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக் கொள்வதோடு மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள் ரந்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment